ராகுலுக்கு வயசு இருக்கு! கண்டிப்பாக அவர் பிரதமராவார்- திருநாவுக்கரசர்

 

ராகுலுக்கு வயசு இருக்கு! கண்டிப்பாக அவர் பிரதமராவார்- திருநாவுக்கரசர்

ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு இன்னும் வயது இருக்கிறது. அவர் என்றைக்காவது ஒருநாள் கண்டிப்பாக பிரதமராவார் என முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு இன்னும் வயது இருக்கிறது. அவர் என்றைக்காவது ஒருநாள் கண்டிப்பாக பிரதமராவார் என முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

சென்னை கத்திபாராவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “ ராகுல் காந்தி பதவி விலகுவார் என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்தி பொறுப்பாக முடியாது.

ஒரு தேர்தலின் வெற்றியோ தோல்வியோ தலைவனின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக் கூடியது அல்ல.இந்த ஐந்து வருடம் என்பது விரைவாக சென்று விடும் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி தான் நிச்சயம் வருவார்.காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருந்து தொடர்ந்து செயல்படும். காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக தான் இருக்கிறது தொடர்ந்தும் ஒற்றுமையாக தான்  செயல்படும்” எனக்கூறினார்.