ராகி ரொட்டி செய்வது கஷ்டமான வேலை என்று நினைப்பவர்கள்…இப்படி ட்ரை பண்ணிப்பாருங்க..!

 

ராகி ரொட்டி செய்வது கஷ்டமான வேலை என்று நினைப்பவர்கள்…இப்படி ட்ரை பண்ணிப்பாருங்க..!

பொதுவாக ராகி.ரொட்டி மிகவும் கனமாக செய்யப்படுவதால் அது ,அதன் தகுதிக்குறிய இடத்தைப் பெற முடியவில்லை. இந்த முறையில் செய்து பாருங்கள், விடவே மாட்டீர்கள்.

தேவையான பொருட்கள்:

raagi

ராகி மாவு ஒரு கப்
பொடியாக வெட்டிய வெங்காயம் 11/2 கப்
பச்சை மிளகாய் 3

onion

பொடியாக நறுக்கிய பூண்டு 1 ஸ்பூன்
முருங்கைக் கீரை அரை கப்
உப்பு

spinach

எண்ணெய்
வாழை இலை சிறிய துண்டு 2

எப்படிச் செய்வது

முதலில் அடுப்பில் ஒரு வானலியை வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விடுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து.வதக்குங்கள்.

onion

ரொட்டிக்குத் தேவையான அளவு உப்புச் சேர்த்து பச்சை மிளகாய்,முருங்கைக் கீரை இவற்றையும் சேர்த்து மொத்தமும் அளவில் பாதியாக குறையும் வரை வதக்கி,அத்துடன் ராகி மாவையும் கொட்டி ஒரு புரட்டு புரட்டி,அடுப்பை அனைத்து விட்டு வதக்கிய கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி அதை ஆறவிடுங்கள்.

roti

இந்தக் கலவை ஆறியதும் அதில் கொஞ்சமாக நீர் சேர்த்து,சப்பாத்தி மாவை விடச் சற்று தளர்வான பதத்தில் உருண்டைகளாக பிடித்து வைத்துவிட்டு தோசைக்கல்லை எடுத்து அடுப்பில் வையுங்கள். வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி அதன் மீது ஒரு ராகி மாவு உருண்டையை வைத்து அதை உங்களுக்கு பிடித்த ஷேப்பில் இலையில் மெலிதாகத் தட்டிப் பரப்பி வையுங்கள்.

roti

தோசைக் கல்லில் எண்ணெய் தடவி இலையோடு ராகி ரொட்டியை எடுத்து,இலை மேலே இருக்கும் படி கவிழ்த்துப் போடுங்கள்.ரொட்டி சூடானதும் இலை மெல்ல மேலெழும்பும்.அதை எடுத்து.விட்டு ரொட்டியின் மேல் அரைஸ்பூன் எண்ணெய் விட்டுத் திருப்பிப் போட்டு எடுங்கள்

raagi

சாஃப்ட்டான,சத்தான ராகி ரொட்டி ரெடி.இதற்குத் தொடுகறிகளும் தேவையில்லை,அப்படியே சாப்பிடலாம்.பனிக்காலத்திற்கு ஏற்ற உணவு.