ரஸ்க் சாப்பிடுறது உண்மையில ரிஸ்க் தான்… உள்ளே இரும்பு போல்ட் இருக்குங்க!

 

இதுபோன்ற பிரபல நிறுவனத்தின் பொருட்கள் தயாரிப்பில் உள்ள  குறைபாடு மக்கள்  உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ளது

கரூர் மாவட்டம் ஜெகதாபி அடுத்த பொராணி கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன். இவர்  பேருந்து நிலையத்தில்  பிரிட்டானியா ரஸ்க் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். பாக்கெட்டை பிரித்து ரஸ்க்கை எடுத்து சாப்பிட, வாயில் ஏதோ தட்டுப்பட என்னவென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் ரஸ்க்கில்  இரும்பு போல்ட் ஒன்று இருந்துள்ளது.

rusk

இந்நிலையில் விவேகானந்தன் அந்த பாக்கெட்டுடன்  மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு நேற்று வந்தார். பின்பு மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

rusk

பெரும்பாலான பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை சரியாக குறிப்பிடப்படுவதில்லை. அந்த வரிசையில் இதுபோன்ற பிரபல நிறுவனத்தின் பொருட்கள் தயாரிப்பில் உள்ள  குறைபாடு மக்கள்  உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ளது என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.