ரஷ்ய அமைச்சரின் விமானத்தை தாக்க முயற்சித்த நோட்டோ விமானம்.. ரஷ்ய போர் விமானம் வந்ததால் திரும்ப ஓட்டம்!!

ரஷ்ய அமைச்சரின் விமானத்தை தாக்க முயற்சித்த நோட்டோ விமானம்.. ரஷ்ய போர் விமானம் வந்ததால் திரும்ப ஓட்டம்!!

ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் சென்ற விமானத்தை பின் தொடர்ந்து வந்து தாக்க முயற்சி செய்தது நோட்டோ படை விமானம். இதை தடுக்க திடீரென ரஷ்ய போர் விமானம் குறுக்கீடு செய்ததால் செய்வதறியாது திரும்பி சென்றது நோட்டோ விமானம். இதனால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. 

நேற்றைய தினம் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் சென்ற விமானம் ஒன்று லித்துவெனியா நாட்டின் பால்டிக் கடல் பரப்பின் மேல்பகுதியில் சென்று கொண்டிருக்கையில், திடீரென நோட்டோ விமான படைக்கு சொந்தமான எப்-18 ரக போர் விமானம் பாதுகாப்பு அமைச்சர் சென்றுகொண்டிருந்த  விமானத்தின் குறுக்கே வந்தது. 

அமைச்சர் சென்று கொண்டிருந்த விமானத்தின் குறுக்கே திடீரென இப்படி ஒரு போர் விமானம் தாக்குவதற்கு வருவதை அறிந்த ரஷ்ய ராணுவம் தனது சு-27 வகை உயர் ரக போர் விமானத்தை பதிலடி கொடுக்க அனுப்பியது. இதை அறிந்த நோட்டோ படை விமானம் எவ்வித செயலிலும் ஈடுபடாமல் வந்த பாதையில் திரும்பிச் சென்றது. 

இறுதியில், ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் சென்ற விமானம் மிகவும் பத்திரமாக செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றது தரையிறங்கியது

இந்த இரு விமானங்களும் வான்வெளியில் ஏறக்குறைய தாக்குதலில் ஈடுபட்டு கொள்ளும் நிலைக்கு சென்று திரும்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வினை வீடியோ பதிவின் மூலம் பதிவிட்டு ரஷ்ய ராணுவம் வெளியிட்டிருந்தது.

இச்சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேபோல் நோட்டோ படை விமானம் பின்தொடர்ந்தது வந்ததற்கு முழு காரணமும் இதுவரை தெரியவில்லை. இதை அறிந்த பிறகு புட்டின் இச்சம்பவத்திற்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.