ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வருகை; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வருகை; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாட்கள் பயணமாக இன்று இந்தியா வரவுள்ளார்

டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாட்கள் பயணமாக இன்று இந்தியா வரவுள்ளார்.

இந்தியா-ரஷ்யா இடையேயான 19-வது ஆண்டு உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வருகிறார்.

டெல்லி வரும் அவர், பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது, ரூ.36,792 கோடி மதிப்பிலான எஸ்- 400 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்த ஏவுகணை வாங்கப்பட்டால், சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு வலுவடையும் என கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்தியா – ரஷ்யா கூட்டு பயிற்சி, இருநாட்டு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவது, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை,  பிராந்திய, சர்வதேச விவகாரங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்கும் புடின்,  இந்திய – ரஷ்ய தொழிலதிபர்கள் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.