ரஷ்யாவில் ரிலீசாகும் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’!

 

ரஷ்யாவில் ரிலீசாகும் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டில் முதன்முறையாக வெளியாகவுள்ளது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டில் முதன்முறையாக வெளியாகவுள்ளது.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

இப்படத்தை ஜன.10ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வரும் நிலையில், முதன்முறையாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தல ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

viswasam

ஏற்கனவே, சூப்பர் ஸ்டாரின் ‘கபாலி’, ‘2.0’ மற்றும் தளபதி விஜய்யின் ‘சர்கார்’ ஆகிய தமிழ் திரைப்படங்கள் ரஷ்யாவில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 2.0 படத்தினை ரஷ்யாவில் வெளியிட்ட பிரஷாந்த் என்பவரே ‘விஸ்வாசம்’ படத்தையும் வெளியிடுகிறார்.

viswasam

இது குறித்து பேசிய அவர், ரஷ்யாவில் 8 நகரங்களில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரிலீசாகிறது. இத்தனை நகரங்களில் தமிழ்ப்படம் ஒன்று வெளியாவது இதுவே முதன்முறை. இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் ரிலீசுக்கு பின் கூடுதல் நகரங்களில் இப்படம் ரிலீசாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.