ரஷ்யாவிற்குப் பறக்கும் அதர்வா – அனுபமா ஜோடி 

 

ரஷ்யாவிற்குப் பறக்கும் அதர்வா – அனுபமா ஜோடி 

பூமராங் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா இணைந்துள்ளார்.

பூமராங் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா இணைந்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா நடிக்கின்றனர். இவர்களுடன் வித்யூலேகா ராமன், ‘ஆடுகளம்’ நரேன், ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் 
சென்னை செம்மொழிப் பூங்காவில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு  20 நாட்கள் எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக அடுத்த மாதம் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அனுபமா கதாபாத்திரம் 96 படத்தில் ஜானு கதாபாத்திரம் போல் இருக்கும் என்று இயக்குநர் கூறியுள்ளார்.