ரயில் முன்பதிவு செய்த டிக்கெட்டின் பயணக் கட்டணத்தை எவ்வாறு திரும்ப பெறுவது? தெரிந்துகொள்வோம்!

 

ரயில் முன்பதிவு செய்த டிக்கெட்டின் பயணக் கட்டணத்தை எவ்வாறு திரும்ப பெறுவது? தெரிந்துகொள்வோம்!

பிரதமரின் சுய ஊரடங்குக்குச் சென்னை மெட்ரோ நிர்வாகமும் ஒத்துழைப்பு அளித்து 22 ஆம் தேதி மட்டும் மெட்ரோ ரயில்களை ரத்து செய்ய உள்ளதாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிரதமரின் சுய ஊரடங்குக்குச் சென்னை மெட்ரோ நிர்வாகமும் ஒத்துழைப்பு அளித்து 22 ஆம் தேதி மட்டும் மெட்ரோ ரயில்களை ரத்து செய்ய உள்ளதாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் நாளை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணிவரை பயணிகள் ரயில்கள் ஓடாது என்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோணா வைரஸ் பரவி வருவது எதிரொலியாக முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளின் பயண கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 ஐஆர்சிடிசி இணையதளத்தில்/ ஆன்லைனில் பதிவுசெய்யப்பட்ட பயணச் சீட்டுகளுக்கான விதிமுறைகளில் மாற்றம் இல்லை. 

ரயில்வே முன்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளன‌. இந்த மாற்றம் மார்ச் 21 முதல் ஏப்ரல் 15 வரை அமுலில் இருக்கும்.

ரயில்வே நிர்வாகம் ரயிலை ரத்து செய்தால், பயணச்சீட்டை பயண தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் ரயில்வே முன்பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்து பயண கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 

ரயில்ரயில்வே நிர்வாகம் ரயிலை ரத்து செய்யாத போது பயணிகள் பயணம் செய்ய விரும்பவில்லை என்றால், பயணத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு ஒப்புவிப்பு ரசீது பதிவுசெய்து கொள்ள வேண்டும். பின்பு இந்த ரசீதினை பதிவு செய்த 60 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கோட்ட வர்த்தக மேலாளருக்கு அனுப்பிவைத்து பயணக்கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

பயணத்தை தொலைபேசி எண் 139 வாயிலாக ரத்து செய்தவர்கள், பயண கட்டணத்தை பயண தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் ரயில் நிலைய முன் பதிவு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். தற்போதைய பேரிடர் காலத்தில், பயணிகள் இந்த விதிமுறைகள் மாற்றத்தைப் பயன்படுத்தி ரயில் நிலையத்திற்கு வருவதை தவிர்க்கவும்.