ரயில் பெட்டிகளை தனி வார்டாக மாற்றும் ரயில்வே… வென்டிலேட்டர் தயாரிக்கும் ஐ.சி.எஃப்! – அதிர்ச்சியில் மக்கள்

ரயில் பெட்டிகளை தனி வார்டாக மாற்றும் ரயில்வே… வென்டிலேட்டர் தயாரிக்கும் ஐ.சி.எஃப்! – அதிர்ச்சியில் மக்கள்

கொரோனா பயங்கரமாக பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில் மக்களுக்கு ஊடகங்கள் நம்பிக்கை மட்டுமே விதைக்க வேண்டும். ஆனால், வந்துகொண்டிருக்கும் செய்திகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை. எனவே, முன்னெச்சரிக்கையாக இருக்கச் சொல்வது ஊடகங்களின் கடமையாக இருக்கிறது. 

கொரோனா பாதிப்பு கிராமங்கள் அளவில் சென்று சேர்ந்துவிட்டதாக அரசுக்கு அறிக்கை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இத்தனை பேருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவ மனைகளில் வசதி இல்லை. இதனால், ரயில் பெட்டிகளைத் தனி வார்டாக மாற்றி சிகிச்சை அளிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

corona-virus-patients

இதன்படி, கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் மருத்துவ வென்டிலேட்டர் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு உதவும் வகையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

piyush-goyal

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க பிரதமர் உத்தரவிட்டதின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தவிர்க்க, யாரும் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. தீவிரத்தை உணர்ந்து மக்கள் அரசு அறிவிப்பு வெளியாகும் வரை வீடுகளிலேயே முடங்கியிருப்பது நல்லது!