ரயில் பயணம் பாதியில் தடைப்பட்டால் பணம் திரும்ப கிடைக்குமா?

 

ரயில் பயணம் பாதியில் தடைப்பட்டால் பணம் திரும்ப கிடைக்குமா?

ரயில் பயணம் பாதியில் தடைப்பட்டால் மற்றும் மாற்று ஏற்பாடுகளை செய்யவில்லை என்றால் பாதிக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம் என ரயில்வே விதிமுறையில் சொல்லப்பட்டுள்ளது.

நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அவர்களில் அதிகம் பேருக்கு ரயில்வே விதிமுறைகள் குறித்து சரியாக தெரியாது. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ரயில்வே விதிமுறைகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம். பயண பாதை பிரச்சினை காரணமாக ரயில் பயணம் இடையில் தடைப்பட்டால் மற்றும் ரயில்வே மாற்று ஏற்பாடுகளை ரயில்வே செய்ய முடியாவிட்டால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட பயணத்திற்கான முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். 

ரயில்

அதேசமயம், ரயில்வே மாற்று ஏற்பாடுகளை செய்து அதனை பயணிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதுவரை பயணம் செய்த பகுதிக்கான கட்டணம் தக்க வைக்கப்பட்டு, டிக்கெட் சரண்டர் செய்த பிறகு மீதமுள்ள தொகை பயணிகளுக்கு திருப்பி கொடுக்கப்படும். ரயில்வே விதிமுறைகளின்படி, பயணிகளிடம் டிக்கெட் சரிபார்ப்பு பணியை இரவு 10 மணிக்குள் பயண சீட்டு பரிசோதகர் முடித்து விட வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் பயணிகளை பயண சீட்டு பரிசோதகர் தொந்தரவு செய்யக் கூடாது

பயண சீட்டு பரிசோதகர்கள்

சில சமயங்களில் தாங்கள் செல்ல விரும்பும் ஊருக்கு டிக்கெட் கிடைக்காத காரணத்தால் பல பயணிகள் தாங்கள் உண்மையில் இறங்க வேண்டிய ரயில் நிலையத்துக்கு முந்தை ரயில் நிலையத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்வர். இது போன்ற சமயங்களில், ரயில் பயணத்தின் போது பயணச்சீட்டின்படி இறங்கிய வேண்டிய ரயில் நிலைய நிறுத்தத்துக்கு முன்பாக இந்த தகவலை பயண சீட்டு பரிசோதகரிடம் தெரிவித்து தங்களது பயணத்தை நீடித்து கொள்ளலாம். பயண சீட்டு பரிசோதகர் அடுத்து இறங்கி வேண்டிய ரயில் நிலையத்துக்கான கூடுதல் கட்டணத்தை பெற்று கொண்டு டிக்கெட் வழங்குவார்.