ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய போறீங்களா… எந்த ஊரு போறீங்களோ அந்த ஊரு அட்ரசும் அவசியம்… கேட்கும் இந்தியன் ரயில்வே

 

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய போறீங்களா… எந்த ஊரு போறீங்களோ அந்த ஊரு அட்ரசும் அவசியம்… கேட்கும் இந்தியன் ரயில்வே

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அனைத்து ரயில் பயணிகளிடமும் சேரும் இடத்தின் முகவரியையும் இந்தியன் ரயில்வே கேட்க தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. லாக்டவுன் காரணமாக 40 நாட்களுக்கு மேலாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு ரயில்கள்

இந்நிலையில் ஜூன் மாதம் 30ம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ், மெயில், புறநகர் ரயில்கள் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படும் என ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அறிவித்தது. அதேசமயம் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என தகவல் வெளியானது. சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். 

ரயில் டிக்கெட் முன்பதிவு

இந்நிலையில், நேற்றுமுன்தினம் முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளிடமும் சேரும் இடத்தின் முகவரியை ரயில்வே கேட்க தொடங்கியுள்ளது. சேருமிடத்தின் முகவரியை கட்டாயம் குறிப்பிடவேண்டும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் பயணிகளை எளிதாக கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை ரயில்வே மேற்கொண்டுள்ளது. கோவிட்-19க்கு எதிரான நீண்ட போருக்கு இந்தியா தயாராகி வருவதால் இது ரயில் பயணத்திற்கு ஒரு நிரந்தர அம்சமாக இருக்கும் என தெரிகிறது.