ரயில் டிக்கெட்களுக்கான முன்பதிவுகள் தேதி குறிப்பிடப்படாமல் ரத்து!

 

ரயில் டிக்கெட்களுக்கான முன்பதிவுகள் தேதி குறிப்பிடப்படாமல் ரத்து!

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று பிரதமர் அறிவித்தார்

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று பிரதமர் அறிவித்தார். முன்னதாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு முடியும் என்பதால் 15ஆம் தேதி முதல் ரயில் நேரில் முன் பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே ரயில் டிக்கெட்களுக்கான முன்பதிவுகள் நடைபெற்று வந்தன. தற்போது ஊரடங்கு மீண்டும் நீடிக்கப்பட்டு விட்டதால், ஏற்கனவே முன்பதிவு  செய்தவர்களின் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் முன்பதிவுகளை ரத்து செய்யத் தேவை இல்லை என்றும் ரயில்வேத்துறை அறிவித்தது. 

ttn

இந்நிலையில், ரயில் டிக்கெட் களுக்கான முன்பதிவுகள் தேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்து மத்திய ரயில்வே துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.