ரயில் கழிவறையில் ரத்த வெள்ளம் ! துடிதுடித்துக் கொண்டிருந்தவருக்கு தீவிர சிகிச்சை !

ரயில் கழிவறையில் ரத்த வெள்ளம் ! துடிதுடித்துக் கொண்டிருந்தவருக்கு தீவிர சிகிச்சை !

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ரயில் கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சுமார் 10 மணிக்கு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த சென்னை-ஏலகிரி விரைவு ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தும் பணியில் துப்புரவு தொழிலாலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

train

ஒரு பெட்டியின் கழிவறைக்கு சென்று பார்த்தபோது அங்கே அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த துப்புரவுத் தொழிலாளர்கள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் அவர் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது சட்டைப் பையில் இருந்த ஆதார் கார்டு எடுத்து பார்த்ததில் அவரது பெயர் ரவி என்பதும் தெலுங்கானா மாநிலம் மாதங்கி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் அவரே தற்கொலை செய்து கொள்ள முயன்றாரா அல்லது வேறு எவரேனும் மதுபான பாட்டிலால் கழுத்தை அறுத்து விட்டுசென்றனா என போலிஸ் விசாரித்து வருகின்றனர். ஆதார் கார்டில் உள்ள முகவரியை வைத்து போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். தற்போது ரவியின் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.