ரயில்வே ஸ்டேஷனில் கட் அவுட், பேனர் வைக்க கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

 

ரயில்வே ஸ்டேஷனில் கட் அவுட், பேனர் வைக்க கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் நடந்த சுபஸ்ரீயின் விபத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதிலும் பேனர், கட் அவுட் வைக்கச் சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது.

சென்னையில் நடந்த சுபஸ்ரீயின் விபத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதிலும் பேனர், கட் அவுட் வைக்கச் சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது. ஆனால், அதையும் மீறி சிலர் ரயில் நிலையங்களில் பேனர் வைப்பதாகவும் அது பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் மதுரையைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். 

Banners

அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், தெற்கு ரயில்வேக்கு சொந்தமான எந்த இடங்களிலும் பேனர், கட் அவுட், பிளக்ஸ் போர்டு போன்ற அனைத்திற்கும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

Court

ஏற்கனவே, சென்னை உயர்நீதி மன்றம் பொது இடங்களில் பேனர் வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அதில், ரயில்வே நிலையங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?. ரயில் நிலையங்களும் பொது இடங்கள் தான். இனிமேல் ரயில்வே நிலையங்களில் பேனர் வைத்தால் ரயில்வே நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த தடையை இன்னும் 3 வாரங்களுக்குள் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.