ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் டிக்கெட் இலவசம்!

 

ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் டிக்கெட் இலவசம்!

டெல்லியிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் உடற்பயிற்சி செய்தால் இலவச நடைமேடை டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றுவைக்கப்பட்டுள்ளது. 

 ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில்தான் உள்ளது இந்த பிளாட்பார்ம் டிக்கெட். இந்த இயந்திரத்தின் முன்பு வித்தைக் காட்டுவது போல் ஒவ்வொருவரும் 30 முறை சிட் அப்  உடற்பயிற்சிகளை 3 நிமிடங்களுக்குள் செய்து இலவச டிக்கெட்டுகளை பெற்று செல்கின்றனர். ரயில் நிலைய மேம்பாட்டுக்கழகம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் இந்த இயந்திரத்திற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்த ஃபிட் இன்டியா பரப்புரை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற இயந்திரத்தை நாடு முழுவதும் வைப்பதற்கான திட்டத்தையும் ரயில்வே பரிசீலித்துவருகிறது. இதுமட்டுமின்றி செல்போன் சார்ஜ் போடும் இயந்திரம், 80 சதவிகித தள்ளுபடியில் மருந்துகள் வழங்கும் கடை, மசாஜ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்த ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.