ரயில்வே துறைக்கு அதிரடி மாற்றங்கள்

ரயில்வே துறைக்கு அதிரடி மாற்றங்கள்

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு 65 ஆயிரத்து 587 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையில், ஆள் இல்லா ரயில்வே கிராசிங் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது, ரயில்வே துறையில் மேலும் நவீனமயமாக்கலும், பயண தூரத்தை குறைக்கும் முயற்சியிலும் திட்டங்கள் வகுப்பதில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

railway

சில நகரங்களை இணைக்கும் ரயில் பாதைகளை, குறிப்பிட்ட பயணப் பாதையில் ஓடும் ரயில்களை தனியார் வசம் ஒப்படைக்கும் எண்ணமும் பரிசீலனையில் இருந்ததாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி தனியார் வசம் முக்கிய நகரங்களை இணைக்கும் பயண வழிகள் ஒப்படைக்கப்பட்டால், பயணிகளுக்கான ரயில் பயணங்களின் சேவையின் தரம் மேலும் உயரும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

பயணிகளுக்கான வசதிகளில் மேம்பாடு, விரைவான பயணம், நேர விரயத்தைத் தவிர்ப்பது எனும் முக்கிய நிபந்தனைகளும் ஆலோசனையில் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறியப்படுகிறது. விமான சேவையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பின் போது, குறைந்த பயண நேரமும், குறிப்பிட்ட நகரங்களுக்கான அதிக எண்ணிக்கையிலான விமானங்களின் சேவையும், ரயில் பயணத்தின் முதல் வகுப்பு கட்டணத்தை விட குறைவான கட்டணத்தில் விமான கட்டணக்குறைப்பு ஏற்பட்டதையும் இந்த திட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களாகப் பார்க்கிறார்கள். 

railway

மேலும், ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் ரயில்வே குறித்த அறிவிப்புகளும், தமிழகத்திற்கு புதிய ரயில்களுக்குமான அறிவிப்புகளும் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

நிதி அமைச்சகம் பாதுகாப்பான ரயில் பயணத்தை அளிக்க அதிகப்படியா நிதி ஒதுக்க இந்த பட்ஜெட்டில் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே புதிய ரயில் சேவைகளை அறிவித்து, மத்திய அரசு இதில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. பழைய ரயில் தண்டவாளங்களை நீக்கிவிட்டு புதிய ரயில் பாதைகள் அமைத்தல், ரயில் பாதையைக் கடக்க மேம்பாலங்கள் மற்றும் சுரங்க பாதைகள் அமைத்தல், பயண நேரத்தைக் குறைக்கும் நடவடிக்கை போன்ற திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படலாம்.

railway

ரயில் நிலையங்களில் லிஃப்ட், எஸ்கலேட்டர், வைஃபை, தங்கும் விடுதி போன்ற திட்டங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்களை ஜிபிஎஸ் மூலம் டிராக் செய்யும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று தகவல்கள் வெளிவருகின்றன.