ரயில்வே டிக்கெட்டில் முறைகேடு – டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் கைது

 

ரயில்வே டிக்கெட்டில் முறைகேடு – டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் கைது

சென்னையில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகளை விற்பனை செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் கொரட்டூர், அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களில் இ-டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.

சென்னையில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகளை விற்பனை செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரட்டூர், அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களில் இ-டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கொரட்டூரில் உள்ள கிருஷ்ணா ஏஜென்சி, அயனாவரத்தில் உள்ள சூரியா ஏஜென்சி ஆகிய இரண்டு நிறுவனங்களில் ஆர்.பி.எப் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

eticket

அதில் 50-க்கும் மேற்பட்ட தனிநபர் பெயரில் ஐ.டி உருவாக்கி ஐ.ஆர்.டி.சி இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்த 300-க்கும் மேற்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகளை ரயில்வே போலீஸ் பறிமுதல் செய்தது. இதன் மதிப்பு மூன்றரை லட்சம் ரூபாய் ஆகும். இரண்டு நிறுவன உரிமையாளர்களையும் கைது செய்த ரயில்வே போலீஸ் அங்கு இருந்த கம்யூட்டர் லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றியுள்ளது.

train ticket

கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற ஆன்லைன் டிக்கெட்டுகளில் மோசடிகள் அதிகரித்து வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 20-க்கும் அதிகமான டிராவல்ஸ் நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். தொடர்ந்து இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய டிராவல்ஸ் நிறுவனங்களை அணுகவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.