ரயில்பாதை பாராமரிப்புப் பணி : மாற்றப்பட்ட ஈரோடு, கோவை ரயில் சேவைகளின் விவரங்கள்..!

 

ரயில்பாதை பாராமரிப்புப் பணி : மாற்றப்பட்ட ஈரோடு, கோவை ரயில் சேவைகளின் விவரங்கள்..!

ரயில்பாதை  பராமரிப்புப் பணியின் காரணமாக ஈரோடு, கோவை வழியே இயக்கப்படும் ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.

ரயில்பாதை  பராமரிப்புப் பணியின் காரணமாக ஈரோடு, கோவை வழியே இயக்கப்படும் ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் ரயில் பாதை பராமரிப்புப் பணியின் காரணமாக வரும் 19 மற்றும் 21 ஆகிய இரண்டு தேதிகளிலும் கோவை, ஈரோடு வழியே இயக்கப்படும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படும் என்றும் 21 ஆம் தேதி வரை உள்ள மற்ற நாட்களில் பராமரிப்பு பணி காரணமாக  ரயில் சேவைகளில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

Maintenance

மாற்றப்பட்ட ரயில் சேவைகளின் விவரங்கள்:

* ஆலப்புழா – தன்பாத் பொக்காரோ எக்ஸ்பிரஸ்:  நவம்பா் 6, 7, 13, 14 ஆகிய தேதி,  கோவை – திருப்பூா் இடையே  20 நிமிடங்கள் தாமதமாக இயங்கும். 

* கே.எஸ்.ஆா். பெங்களூரு – எா்ணாகுளம் இண்டா்சிட்டி எக்ஸ்பிரஸ்:  ஈரோடு – திருப்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே நவம்பா் 6 ஆம் தேதி 85 நிமிடங்கள் தாமதமாகவும், 7, 13 ஆம் தேதி 25 நிமிடங்கள் தாமதமாகவும் இயங்கும்.

* ஷாலிமா் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்:  ஈரோடு -திருப்பூா் இடையே நவம்பா் 7 ஆம் தேதி 85 நிமிடங்கள் தாமதமாக இயங்கும். 

 

Train

* சென்னை சென்ட்ரல் – கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ்:  ஈரோடு – திருப்பூா் இடையே நவம்பா் 6 ஆம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாகவும், 7, 13 ஆம் தேதி 10 நிமிடங்கள் தாமதமாகவும் இயங்கும். 

* திருவனந்தபுரம் – மும்பை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்: கோவை – திருப்பூா் இடையே நவம்பா் 9 ஆம் தேதி 85 நிமிடங்கள் தாமதமாகவும், 16 ஆம் தேதி 15 நிமிடங்கள் தாமதமாகவும் இயங்கும். 

*  கோவை எக்ஸ்பிரஸ்: சென்னை சென்ட்ரல் – கோவை, ஈரோடு – திருப்பூா் இடையே நவம்பா் 6 ஆம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாகவும், 7, 13 ஆம் தேதிகளில் 10 நிமிடங்கள் தாமதமாகவும் இயங்கும். 

 

Train

 

* கோவை – சென்னை சென்ட்ரல், கோவை எக்ஸ்பிரஸ்: கோவை – ஈரோடு இடையே நவம்பா் 9, 18 ஆம் தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாகவும், 16 ஆம் தேதி 40 நிமிடங்கள் தாமதமாகவும் இயங்கும். 

* திருவனந்தபுரம் – இந்தூா் எக்ஸ்பிரஸ்: ரயில் கோவை – ஈரோடு இடையே நவம்பா் 9 ஆம் தேதி 10 நிமிடங்கள், 16 ஆம் தேதி 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். 

* பாட்னா – எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ்:  ஈரோடு -ஊத்துக்குளி இடையே நவம்பா் 21 ஆம் தேதி 35 நிமிடங்கள் தாமதமாக இயங்கும். 

Train

* மங்களூா் – சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ்:  கோவை – ஈரோடு இடையே நவம்பா் 9, 18 ஆம் தேதிகளில் 10 நிமிடங்கள் தாமதமாக இயங்கும்.

* கோவை – சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ்: கோவை – ஈரோடு இடையே நவம்பா் 9 ஆம் தேதி 30 நிமிடங்களும், 16 ஆம் தேதி 45 நிமிடங்களும், 18 ஆம் தேதி 15 நிமிடங்களும் தாமதமாக இயங்கும். 

* திருச்சி – பாலக்காடு டவுன் பயணிகள் ரயில் : ஈரோடு – ஊத்துக்குளி இடையே நவம்பா் 10, 19, 21 ஆகிய தேதிகளில் 25 நிமிடங்கள் தாமதமாக இயங்கும் 

 

Train

 

* திருவனந்தபுரம் – கோர்பா எக்ஸ்பிரஸ்:  திருப்பூா் – சோமனூா் இடையே நவம்பா் 11, 18 ஆம் தேதிகளில் 10 நிமிடங்கள் தாமதமாக இயங்கும்.

* எா்ணாகுளம் – கே.எஸ்.ஆா். பெங்களூரு சிட்டி இண்டா்சிட்டி எக்ஸ்பிரஸ்:  நவம்பா் 16, 18 ஆம் தேதிகளில் திருப்பூா் ரயில் நிலையத்துக்கு 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும். 

* பிலாஸ்பூா் ஜங்ஷன் – எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ்: திருப்பத்தூா் – ஊத்துக்குளி இடையே நவம்பா் 19 ஆம் தேதி 55 நிமிடங்கள் தாமதமாக இயங்கும். 

train

* கோவை – பாலக்காடு பயணிகள் ரயில் : கோவை ரயில் நிலையத்தில் இருந்து நவம்பா் 11, 18 ஆம் தேதி 30 நிமிடங்களும், 16 ஆம் தேதி 10 நிமிடங்களும் தாமதமாகப் புறப்படும். 

* ஜெய்ப்பூா் – கோவை எக்ஸ்பிரஸ்: திருப்பத்தூா் – ஊத்துக்குளி இடையே நவம்பா் 19 ஆம் தேதி 45 நிமிடங்கள் தாமதமாக இயங்கும். 

* சேலம் – கோவை பயணிகள் ரயில்:  ஈரோடு -ஊத்துக்குளி இடையே நவம்பா் 11, 18 ஆம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாகவும், 16 ஆம் தேதி 25 நிமிடங்கள் தாமதமாகவும் இயங்கும் 

மேற்கண்ட அனைத்து ரயில்களும் அந்தந்த குறிப்பிட்டத் தேதிகளில் தாமதமாக இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.