ரயில்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: டிடிவி தினகரன் ட்வீட்..

 

ரயில்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: டிடிவி தினகரன் ட்வீட்..

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம் கொடுக்கலாம். ஆனால் ரயில்களை இயக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைப்பது சரியாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்திய ரயில்வேத் துறை தனியார் ரயில்கள் இயங்குவதற்கு அனுமதியளித்தது. அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து பெங்களூரு,மதுரை, கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் ரயில்களில் எந்த ரயிலை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று நேற்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாயின. 

TTV Dinakaran tweet

இது குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ரயில் சேவைகளை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், ” நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேத்துறையை தனியார் மயமாக்குவது பல கோடி கணக்கான ஏழை எளிய மக்களை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம் கொடுக்கலாம். ஆனால் ரயில்களை இயக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைப்பது சரியாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.