ரயிலில் சீட்டுக்காக போட்டுக்கொண்ட சண்டை… கொலையில் முடிந்த விபரீதம்

ரயிலில் சீட்டுக்காக போட்டுக்கொண்ட சண்டை… கொலையில் முடிந்த விபரீதம்

கைக்குழந்தையோடு நின்று கொண்டிருந்த  தன் மனைவி உட்காறுவதற்காக, இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியை சற்று தள்ளி உட்காருமாறு கேட்டுள்ளார். இதை மறுத்த அந்த பெண் மார்காட்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் தீவிரமடைய மார்க்காட்டை, ஆறு பெண்கள் உட்பட 12 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

வியாழக்கிழமை அன்று, மும்பை-லாதூர்-பிதர் எக்ஸ்பிரஸில் ஒரு இருக்கைக்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். மகாராஷ்டிராவில் புனே மற்றும் டவுண்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்திருப்பதாக ஜிஆர்பி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாகர் மார்காட், என்பவர் அவரது மனைவி ஜோதி, தாய் மற்றும் இரண்டு வயது மகள் ஆகியோருடன் புனே நிலையத்திலிருந்து பொது பெட்டியில் அதிகாலை 12.45 மணியளவில் ஏறியுள்ளனர்.

Mumbai-Latur-Bidar-Express

கைக்குழந்தையோடு நின்று கொண்டிருந்த  தன் மனைவி உட்காறுவதற்காக, இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியை சற்று தள்ளி உட்காருமாறு கேட்டுள்ளார். இதை மறுத்த அந்த பெண் மார்காட்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் தீவிரமடைய மார்க்காட்டை, ஆறு பெண்கள் உட்பட 12 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

மார்க்காட் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முயன்றபோது, அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல், ரயில் டவுண்ட் ஸ்டேஷனை அடையும் வரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரைத் தாக்கியுள்ளனர்” 

டவுண்ட் நிலையத்தில், காவல்துறையினர் மார்க்காட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மார்க்காட்டின் மனைவி அளித்துள்ள புகாரின் பேரில், பிரிவு 302 (கொலை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.