ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளை: மேலும் 5 பேர் கைது

 

ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளை: மேலும் 5 பேர் கைது

சேலம்-சென்னை ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.75 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை கொள்ளையடித்த வழக்கில் வட மாநில கொள்ளையர்கள் மேலும் ஐந்து பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை: சேலம்-சென்னை ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.75 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை கொள்ளையடித்த வழக்கில் வட மாநில கொள்ளையர்கள் மேலும் ஐந்து பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில், பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு, ஏனைய வங்கிகள் அனுப்பி வைத்தன. 228 பெட்டிகளில் 23 டன் எடை கொண்ட பழைய ரூபாய் நோட்டுகள் அனுப்பப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.342 கோடி என தெரிவிக்கப்பட்டது.

இந்த ரயிலானது விழுப்புரம் அருகே வந்த போது, ரயிலின் மேற்கூரையை வெல்டிங் இயந்திரம் மூலம் துளையிட்டு ரூ.5.75 கோடி பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் துப்பு துலங்கியதாக தெரிவித்த சிபிசிஐடி போலீசார், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, இச்சமம்பவம் தொடர்பாக மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்த்தி ஆகியோரை சிபிஐஐடி போலீசார் கைது கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த பிரபல கொள்ளையர் மோகர் சிங் தலைமையில் கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநில சிறையில் இருந்த மோகர் சிங் உள்ளிட்ட ஐந்து பேரை சிபிஐடி போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

சின்ன சேலத்திற்கும், விருதாச்சலத்திற்கும் இடையே ரயில் பெட்டி மேற்கூரையை துளையிட்டு அதற்குள் இருவர் இறங்கி கொள்ளையடித்ததாகவும், பின்னர், விருதாச்சலம் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கு காத்திருந்த மேலும் ஐவருடன் மத்திய பிரதேசத்திற்கு தப்பி சென்றதாகவும் ஏற்கனவே கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.