ரம்ஜான் ஸ்பெஷல்: பசி ஓர் மருந்து! இதுதான் இஸ்லாமியத்தின் சமத்துவம்!!

 

ரம்ஜான் ஸ்பெஷல்: பசி ஓர் மருந்து! இதுதான் இஸ்லாமியத்தின் சமத்துவம்!!

பசி என்பது மிகவும் அற்புதமான மருந்து என இஸ்லாமியத்தின் சமத்துவங்கள் தெரிவிக்கின்றன. பசி எப்படி மருந்தாகும்… பசி நேரத்தில் சாப்பிடாமல் தன்னை தானே வருத்திக்கொள்வது சரியா என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக அமைகிறது இந்த கட்டுரை

பசி என்பது மிகவும் அற்புதமான மருந்து என இஸ்லாமியத்தின் சமத்துவங்கள் தெரிவிக்கின்றன. பசி எப்படி மருந்தாகும்… பசி நேரத்தில் சாப்பிடாமல் தன்னை தானே வருத்திக்கொள்வது சரியா என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக அமைகிறது இந்த கட்டுரை… 

ramzan

இஸ்லாமியர்கள் ஐம்பெரும் கடமைகளை தவறாமல் ஆற்றுகின்றனர். அதுஎன்னவெனில் இறைநம்பிக்கை (கலிமா), இறை வழிபாடு (தொழுகை), தான தர்மங்கள் செய்தல் (ஜாகத்), நோன்பு மற்றும் புனித பயணம் (ஹஜ்) ஆகியவையே. அதிலும் மிக முக்கியமானது 30 நாட்கள் புசிக்காமல் பசியில் இருக்கும் நோன்பு. இந்த நோன்பு எனும் மாண்பு என்ன சொல்கிறது தெரியுமா? 

ramzan

ரமலான் மாதம் என்றாலே சிறப்புதான். எனெனில் புனித மாதமாக கருதப்படுகிறது. தற்போது உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள், நோன்பை கடைப்பிடித்து வருகின்றனர். பகல் முழுவதும் பசியில் இருந்து இரவு முழுவதும் இறைவனங்கி வணங்கி அதிகாலையில் உணவு உட்கொள்கின்றனர். சூரிய உதயத்திற்கு முன்பாக நோன்பை தொடங்கும் இஸ்லாமியர்கள் இறைவனுக்காக நாள் முழுவது தண்ணீர் கூட அருந்துவது இல்லை. பசி என்பது பிணி தீர்க்கும் மருந்து என்கின்றனர் இஸ்லாமியர்கள். 

ramzan

உலகின் பல புரட்சிகளுக்கும் சிந்தனைகளுக்கும் அடித்தளம் இந்த பசி. இந்த பசியின் மூலம் கோபம், பொறாமை, காமம், அகங்காரம் என அனைத்தும் மனிதனின் கட்டுப்பாட்டில் வருகிறது. பசியுடன் இருந்தால் இறைவனுக்கு மிக நெருக்கமாக செல்லலாம், சுய ஒழுக்கமும், அடக்கமும் வருவது இந்த பசியால் தான். பணக்காரர் நோன்பின் மூலம் பசியை உணர்கிறார். இதனை உணர்த்துவதே  இஸ்லாமியம். நோன்பின்போது எந்த ஒரு இஸ்லாமியர்களும், நோன்பு இருக்கும்போது தீய சொற்களை பேச மாட்டார்கள், கண் தீயவற்றை பேசாது. அநாவசியமாக கை யாரையும் சீண்டாது. ஐம்புலன்களும் அடக்கி ஆளப்படும். இவ்வாறு மனிதனை பக்குவப்பட வைப்பதே நோன்பின் நோக்கமாகும்.