ரம்ஜான் ஸ்பெஷல்: சாப்பிடாமால் இருப்பது மட்டும் நோன்பு அல்ல..! இன்னொன்றும் இருக்கு!! 

 

ரம்ஜான் ஸ்பெஷல்: சாப்பிடாமால் இருப்பது மட்டும் நோன்பு அல்ல..! இன்னொன்றும் இருக்கு!! 

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று நோன்பு…. அதாவது, பகல் முழுவதும் உண்ணாமல் இருந்து உடலை வறுத்துவது தான் நோன்பு…. 30 நாட்களும் நோன்பு வைப்பது இஸ்லாமியர்களின் வழக்கம்.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று நோன்பு…. அதாவது, பகல் முழுவதும் உண்ணாமல் இருந்து உடலை வறுத்துவது தான் நோன்பு…. 30 நாட்களும் நோன்பு வைப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். நோன்பின் போது பசித்திருப்பது மட்டுமின்றி, ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் இஸ்லாமியர்கள். 

Ramzan

நோன்பு யார் யாருக்கெல்லாம் கடமையாக்கப்பட்டு இருக்கிறது. நோன்பை யார் யாரெல்லம் தவிர்த்து கொள்ளலாம் என்பதும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தின் முப்பது நாட்களும் 10 வயதை தொட்ட குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து இஸ்லாமியர்களும் நோன்பு இருப்பார்கள். உடல்நிலை முடியாதவர்கள், நடக்க இயலாத முதியவர்களுக்கு என நோன்பில் சிலருக்கு விதிவிலக்கும்  உண்டு. அப்படி நோன்பு வைக்க முடியாதவர்கள் அந்நாளில் நோன்பிருக்கும் மூன்று  பேருக்கு உணவு கொடுக்க வேண்டும் என்ற பழக்கத்தையும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கிறார்கள். 

ramzan q

நோன்பு என்பது உணவில் மட்டுமல்ல, பழக்க வழக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக என இஸ்லாமியர்கள் கூறுகின்றனர். கட்டுப்பாடுகளுடன் வாழ்வது மட்டுமல்ல வறியவர்களுக்கு தான தர்மங்களை தாரளமாக வழங்க வேண்டும் என்பதும் நோன்பின் முக்கிய நியதியாக விளங்குகிறது. முப்பது நாள் நோன்பிருக்கும் மக்களுக்கு உணவாய் மருந்தாய் அமைவது நோன்புக்கஞ்சி மட்டும்தான். நாள்தோறும் 14 மணி நேரம் வரை நோன்பு இருக்கிறார்கள். அதிகாலை முதல் நோன்பிருப்பதால் மாலையில் வெறுமையான வயிற்றை பசியாற்றும் வகையிலும் பல்வேறு பொருட்களை கலந்து நோன்புக்கஞ்சியை தயாரிக்கின்றனர். நோன்புக்கஞ்சிக்கு துணையாய் கத்தரிக்காய் பச்சடி தயார் செய்யப்படுகிறது.

ramzan b

நோன்பிருக்கும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் நோன்புக்கஞ்சி தயார் செய்யப்படும். அந்த நோன்பு கஞ்சி முஸ்லீம்களுக்கு மட்டுமல்லாது மற்ற மதத்தினருக்கும் வழங்கப்படுகிறது. ரமலான் மாதத்தில் தான், திருக்குர்-ஆன் இறைவனால் அருளப்பட்டது. இதனால், மற்ற மாதங்களை விட ரமலான் மாதத்தை புனிதமாகக் கருதுகின்றனர் இஸ்லாமியர்கள்.