ரம்ஜான் சர்பத் பற்றி தெரியுமா? வட இந்தியாவில் இதாங்க ஃபேமஸ்..!

 

ரம்ஜான் சர்பத் பற்றி தெரியுமா? வட இந்தியாவில் இதாங்க ஃபேமஸ்..!

தமிழகத்தில் நன்னாரி சர்பத் எவ்வளவு பிரபலமானதோ அவ்வளவு பிரபலமானது வட இந்தியாவில் ரூஅப்சா சர்பத். வெறும் சுவைக்காகவோ அல்லது நோன்பை முடிக்கும் முறைக்காகவோ இந்த சர்பத்தை இஸ்லாமியர்கள் பருகவில்லை.

ரம்ஜானை முன்னிட்டு வட இந்தியாவில் ரூஅப்சா  சர்பத்  என்ற குளிர்பானத்தை குடிப்பதை இஸ்லாமியர்கள் பழக்கமாக வைத்துள்ளனர். நோன்பை முடிக்கும் நேரத்தில் இதை இஸ்லாமிய மக்கள் விரும்பி பருகுவது வழக்கம்.  ஒவ்வொரு நாளும் நோன்பை முடிக்கும்போது வடநாட்டு இஸ்லாமியர்கள் இந்த குளிர்பானத்தைதான் எடுத்துக்கொள்கின்றனர்.

Sarbhat

அதாவது தமிழகத்தில் நன்னாரி சர்பத் எவ்வளவு பிரபலமானதோ அவ்வளவு பிரபலமானது வட இந்தியாவில் ரூஅப்சா சர்பத். வெறும் சுவைக்காகவோ அல்லது நோன்பை முடிக்கும் முறைக்காகவோ இந்த சர்பத்தை இஸ்லாமியர்கள் பருகவில்லை. மாறாக ரூஅப்சா சர்பத் கோடை காலத்திற்கு மிகவும் நல்லது. காலையிலிருந்து சாப்பிடாமல் இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் புத்துணர்வு பெருவர். இந்த காரணங்களினால்தான் ரூஅப்சா சர்பத் இஸ்லாமியர்களால் பருகப்படுகிறது. 

இதை எப்படி தயார் செய்வது? 

 

sabja

உதாரணமாக நன்னாரி சர்பத்தை தயாரிக்க எப்படி ஒரு நன்னாரி பாட்டிலில் சர்பத் விற்பனை செய்யப்படுகிறதோ அதே போன்று  ரூ அப்சா எஸ்ஸென்ஸ் கலந்த சர்பத் பாட்டில் வட மாநில சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். 

ss

ரூ அப்சா எஸ்ஸேன்ஸ் உடன் 2 எலும்பிச்சை பழம், சிறிதளவு சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் போன்றவற்றை நன்கு கலந்துகொள்ள வேண்டும். அதன்பின் சப்ஜா விதையை 2 மணி நேரம் ஊறவைத்தப்பின் அதனுடன் சேர்க்க வேண்டும். இறுதியாக தேவையான அளவு ஐஸ் கட்டிகளை அதனுடன் கலந்து பருகினால் ரம்ஜான் சர்பத் ரெடி….