ரமலான் விரதம் முடிக்கும்போது எலுமிச்சை சாறு பருகுவது சரியா?

ரமலான்  விரதம் முடிக்கும்போது எலுமிச்சை சாறு பருகுவது சரியா?

அதிகாலை சகர் சாப்பாட்டுக்கு பிறகு  கிட்டத்தட்ட 14 மணி நேரம் கழித்து நோன்பு திறக்கும்போது பெரும்பாலான இஸ்லாமியர் பருகுவது லெமன் ஜூஸ்,அல்லது பச்சைப்பாலில் கலக்கப்பட்ட ரோஸ்மில்க்.இந்த இரண்டுமே ஆரோக்கியமான பானங்கள் அல்ல.

ramzan

எலுமிச்சை சாற்றில் அசிட்டிக் அமிலம் இருக்கிறது.இது பகல் முழவதும் எதுவும் உண்ணாத்தால் நம் வயிற்றில் சுரந்திருக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் சேரும்போது அசிடிடிட்டி ஏற்படும்.இதனால் வாந்தி,குமட்டல், நெஞ்செரிச்சல்,புளித்த ஏப்பம் போன்றவை ஏற்படலாம்.

இதைத் தொடர்ந்து செயவதால் நெஞ்சுவலியும் வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் அதிக சிறுநீர் வெளியேறும்.அது உடலின் நீர்ச்சதை குறைத்து மந்தமாக்கிவிடும். சமையத்தில் மயக்கம்கூட ஏற்படலாம்.

lemon juice

எலுமிச்சையை உணவிற்கு பிறகு சாப்பிடுவதே ஆரோக்கியம்.பாட்டிலில் அடைத்து விற்கும் செயற்கை குளிர் பானங்களையும் தவிருங்கள்.
பச்சை பாலில் கலந்த ரோஸ்மில்க்கும் தவிர்க்க வேண்டியதே.பச்சைப்பால் செரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் அதுவும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும்

இஃப்தார் ( நோன்பு) நேரத்தில் , இயற்கையான பழரசங்கள்,இளநீர்,தேன் கலந்த புதினாச்சாறு,சப்ஜா விதை போன்றவற்றை பருகுவதே உடலுக்கு ஆரோக்கியத்தையும் நோன்பு நோற்பதற்கான மனநிலையையும் தரும்.