ரமலான் நோன்பு இருக்கும் போது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது?

ரமலான் நோன்பு இருக்கும் போது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது?

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மிக உயர்வானதாகக் கருதப்படுவது ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பது. சூரிய உதயத்திற்கும், அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் உணவு, நீர் என்று எதுவும் அருந்தாமல் இறைவனை நோக்கி தீவிரமாக பக்தி செலுத்தும் இஸ்லாமிய நண்பர்கள் உணவு இல்லாத அந்த நீண்ட பகல் பொழுதை பிரார்தனையுடன் கழிக்கிறார்கள். இஸ்லாமிய நாட்காட்டியின் இந்த புனித ரமலான் மாதத்தில் நோன்பு  இருப்பதற்கான கூலி அவர்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.

ramzan fasting

அதே சமயம், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இடையே உணவு உண்ணாமல், தண்ணீர் அருந்தாமல் இருப்பது மட்டுமே ரமலான் கிடையாது. ரமலான் மாதம் என்பதே மனதையும், உடலையும் சுத்திகரிப்பிற்கானது. இன்பம் தரக் கூடிய விஷயங்களை இம்மாதத்தில் அவர்கள் கைவிடுகிறார்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் அவர்கள் மனதை ஈடுபடுத்துவதில்லை. 
நாள் முழுவதும் உணவு, நீர் எடுத்துக் கொள்ளாமல் சஹர் (நோன்பின் போது அதிகாலையில்) சமயத்தில் அதிகாலை 2.30 மணிக்கே எழுந்து இறைவனை நினைத்து உண்பது மிக முக்கியமானதாக கருதுகிறார்கள். இது அத்தனை சுலபமானதாக இருக்காது. உடலும், உள்ளமும் காற்றில் பறக்கும் பறவையைப் போல கைவரப் பெறுகிறது. பகல் பொழுதில் சக்தியை இழக்காமல் சேகரித்து வைப்பதற்காகவும், இறைவனை நோக்கி தங்களது பிரார்த்தனைகளைச் செய்வதற்காகவும் தேவையில்லாத இடங்களில் பேசுவதைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

ramzan fasting

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் மெளன விரதம் இருப்பதைப் போலத் தான். ஆன்ம சக்தி கைவரப் பெறுகிறது. இன்னொரு புறம் ரமலான் பிரார்த்தனைகளோடு, ரமலான் மாதத்தை ஈகை நாட்களாக கருதுகிறார்கள். உணவிற்கு வழி இல்லாதவர்களை மிகவும் கருணையுடனும் கனிவுடனும் நடத்த இந்த நாட்கள் அவர்களுக்கு ஊக்கம் தருகிறது. ஈகை என்பது ரமலானின் ஒரு பகுதி.
நாட்கள் செல்ல செல்ல நோன்பு இருத்தலுக்கு ஏற்ப உடல் தகவமைத்துக் கொள்ளும். நீங்கள் நினைத்ததைவிட குறைந்த நேரம் மட்டுமே உறங்குவார்கள்.  
ரமலானின் இந்த நாட்கள் பிரார்த்தனைக்காக, ஈகைக்கான நாட்கள். இவற்றை சுற்றிதான் இந்த நாட்கள் சுழலும். இந்த நாட்களில் அவர்கள் குடும்பத்தில் குதூகலத்துடன் அழகான எளிமையும் இருக்கும் .