ரப்பர் தோட்ட தொழிலாளரை ஏமாற்றிய அமைச்சர்!

 

ரப்பர் தோட்ட தொழிலாளரை ஏமாற்றிய அமைச்சர்!

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுகிறது தமிழ்நாடு ரப்பர் கழகம்.  இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு நான்காண்டுகளாக இழுபறியில் இருக்கிறது. 47 முறை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுகிறது தமிழ்நாடு ரப்பர் கழகம்.  இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு நான்காண்டுகளாக இழுபறியில் இருக்கிறது. 47 முறை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

rubber-estate

இடைக்கால நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 23 ரூபாயை நிரந்தரமாக்குவதாக அதிகாரிகள் சொன்னதை ரப்பர் தொழிலாளர்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு, நாகர்கோவில் வந்த திண்டுக்கல் சீனிவாசன் துறைசார்ந்த அமைச்சர் என்ற முறையில் தொழிலாளகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினாராம்.அப்போது ரப்பர்தோட்டத் தொழிலாளர்கள் பிரட்சினைகளை தானே முதல்வரிடம் பேசி நல்ல தீர்வுக்கு வழி செய்வதாகச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாராம்.

அதற்குப் பிறகு ஏழெட்டு மாதங்கள் ஆன பிறகும் ஊதிய உயர்வு குறித்து எந்தத் தகவலும் இல்லாததால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் இறங்கி இருக்கிறார்கள். அப்போதும் யாரும் கண்டுகொள்ளவில்லை. வேலை நிறுத்த நோட்டீசைப் பார்த்த அதிகாரிகள் ‘ரப்பர்கழகத்தையே விரைவில் மூடப்போகுது அரசு,இதில் சம்பள உயர்வு வேற தருவாங்களாக்கும்’ என்று கிண்டலடிக்கிறார்களாம் தொழிலாளர்கள்.

dindigul-srinivasan-11

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த வாக்குறுதியைப் பற்றி விசாரித்தால் அதற்கும் சிரிப்புதான் பதிலாக வருகிறதாம்.அன்று பேச்சு வார்த்தை முடிந்து தொழிலாளர்கள் வெளியே போன உடனே அமைச்சர், அங்கிருந்த தொழிலாளர்களிடம்,” அவங்க சந்தோசமா போகட்டும்னுதான் சி.எம் கிட்ட பேசறதா சொன்னேன். அதையெல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க” என்று அமைச்சர் அப்போது சொன்னது தொழிலாளர்களுக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது. 

அவரது அடுத்த விசிட்டுக்காக ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்களாம்.மீண்டும் திண்டுக்கல் சீனிவாசன் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.