ரன் ஓடாததற்கு இது தான் காரணம்; தோனி ஓபன் டாக் !!

 

ரன் ஓடாததற்கு இது தான் காரணம்; தோனி ஓபன் டாக் !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, அந்த அணியின் முதல் நான்கு முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

பெங்களூர்: பெங்களூர் அணியுடனான போட்டியின் 19வது ஓவரில் ரன்கள் ஓடாததற்கான  உண்மை காரணத்தை தோனி தெளிவுபடுத்தியுள்ளார். 

dhoni

ஐ.பி.எல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தளபதி விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.  இதில் டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார், இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. 

rcb

இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, அந்த அணியின் முதல் நான்கு முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

dhoni

இதன் பிறகு களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி, தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டதன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 26 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 26 ரன்கள் என்பது சாத்தியம் இல்லாதது என சென்னை ரசிகர்களே நினைத்த போதிலும் அந்த ஓவரில் மூன்று சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து மாஸ் காட்டிய தோனி கடைசி பந்தை மட்டும் எதிர்கொள்ள தவறியதால் சென்னை அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. 

csk

இந்த போட்டியில் படுதோல்வி அடைய வேண்டிய சென்னை அணியை தனி ஒருவனாக வெற்றிக்கு மிக அருகில் வரை தோனி அழைத்து வந்திருந்தாலும் தோனியை குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கும் சிலர் இந்த தோல்விக்கும் தோனி தான் காரணம், குறிப்பாக 19வது ஓவரில் ரன் ஓடாமல் தானே அடிக்க வேண்டும் என்ற தோனியின் அகம்பாவமே காரணம் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

dhoni

இந்த நிலையில் 19வது ஓவரில் ரன் ஓடாததற்கான காரணம் என்ன என்பதை தோனியே தெளிவுபடுத்தியுள்ளார். பெங்களூர் அணியுடனான போட்டி நிறைவடைந்த பிறகு பேசிய தோனி, ஆடுகளம் பேட்டிங் ஆட சற்று கடினமாக இருந்தது. அந்த நிலையில், புதிதாக களத்திற்கு வந்த பேட்ஸ்மேன் பெரிய ஷாட்டுகளை ஆடுவது கடினம். அதனால் நான் களத்தில் நீண்ட நேரம் நின்றதால், நானே ஸ்டிரைக்கில் இருந்து அடிக்கலாம் என்று நினைத்து சிங்கிள் ஓட மறுத்தேன் என்று தோனி விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் வாசிக்க: சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி: தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!