ரத்த கறையுடன் ‘லிப்ட்’- இல் கவின்!

 

ரத்த கறையுடன் ‘லிப்ட்’- இல் கவின்!

பிக்பாஸ் கவின் நடிப்பில் உருவாகும் இரண்டாவது படம் லிப்ட். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ்  3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னதிரையில்  அறிமுகமான இவர் வேட்டையன் கதாபாத்திரம் மூலம் பலரது பாராட்டைப்  பெற்றார். இதையடுத்து நடிகை ரம்யா நம்பீசனுடன் இணைந்து அவர் நடித்த ‘நட்புனா என்னனு தெரியுமா’  திரைப்படம் எதிர்ப்பார்த்தளவு கைகொடுக்கவில்லை.

kavin

இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் களமிறங்கி அதிகளவு ஆர்மிகளை சம்பாதித்த பெருமை கவினை சாரும். மேலும் காதல், நட்பு உள்ளிட்ட விஷயங்களால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். கவின் ஆர்மிகள் பெய்டு ஆர்மி என்ற விமர்சனம் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கவினின் அடுத்த திட்டங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளவே, கவினின்  ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடிக்கும் படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் வினீத் இயக்கி தயாரிக்கிறார். இதில் கவினுக்கு ஜோடியாக  பிகில் படத்தில் நடித்த நடித்த அமிர்தா நடிக்கிறார். இப்படத்துக்கு  ‘லிப்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

 

 

லிப்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கவின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இந்த படத்துக்காக கடுமையாக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களையும் லிப்ட் தூக்கிவிடும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.