ரத்தாகும் கல்விக்கடன் ?- நிர்மலா சீதாராமன் விளக்கம் 

ரத்தாகும் கல்விக்கடன் ?- நிர்மலா சீதாராமன் விளக்கம் 

கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

பொதுத்துறை வங்கிகள் அளித்த தகவலின்படி 2016 முதல் 2019மார்ச் வரை, அதாவது கடந்த மூன்று ஆண்டுகளில்  75,450.68 கோடி ரூபாய் கல்விக் கடன் நிலுவையில் உள்ளது. கல்விக்கடன்களை திருப்பி செலுத்தும்படி வங்கிகள் அழுத்தம் கொடுப்பதால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு ஆளாகிவிடுகின்றன.

nirmala sitharaman

இதுகுறித்து கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், “மாணவர்கள் கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டது போன்ற தகவலை எந்த வங்கியும் வழங்கவில்லை. கல்விக்கடனை மீட்டெடுக்க வங்கிகள் தயாராகவுள்ளன. மேலும், கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.