ரத்தப் புற்றுநோய் உள்ள குழந்தைக்கு மருந்துகள் வழங்க நடவடிக்கை – முதல்வர் பழனிசாமிக்கு குவியும் பாராட்டு

 

ரத்தப் புற்றுநோய் உள்ள குழந்தைக்கு மருந்துகள் வழங்க நடவடிக்கை – முதல்வர் பழனிசாமிக்கு குவியும் பாராட்டு

ரத்தப் புற்றுநோய் உள்ள குழந்தைக்கு மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்ததற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னை: ரத்தப் புற்றுநோய் உள்ள குழந்தைக்கு மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்ததற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழக முதல்வர் பழனிசாமியின் ட்விட்டர் கணக்குக்கு ஒருவர் ட்விட்டர் பதிவு ஒன்றை கவனத்திற்கு கொண்டு சென்றார். அந்த ட்விட்டர் பதிவில் “இந்த குழந்தைக்கு ரத்த புற்றுநோய் மருந்துகள் சென்னையில் உள்ள ஐ.சி.எச் மருத்துவமனை மூலம் கொடுக்கப்படுகிறது. மருந்து தற்போது தீர்ந்து விட்டது தற்பொழுது உள்ள சூழ்நிலையால் பெற்றோரால் சென்று மருந்து வாங்க முடியவில்லை.தயவுகூர்ந்து மருந்துகள் பெற்றோரை சென்றடைய வேண்டுகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த பதிவிற்கு முதல்வர் பழனிசாமி ட்விட்டர் கணக்கில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அப்பதிவில் “இந்த சின்னஞ்சிறு வயதிலேயே நோயை எதிர்த்து போராடும் இக்குழந்தை விரைவில் பூரண குணமடைந்து நலம்பெற வேண்டிக் கொள்கிறேன். இக்குழந்தைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது. முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைதளவாசிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.