ரத்தத்தை உறிஞ்சும் ராட்சத பறவை!

ரத்தத்தை உறிஞ்சும் ராட்சத பறவை!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள கலபாகோஸ் (Galapagos) எனும் தீவில் ஒரு சிறிய பழுப்பு நிறப் பறவை உள்ளது. அதன் பெயர் வெம்பயர் ஃபின்ச் (vampire finch).இது மனிதனின் உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சும் என கூறப்படுகிறது. 

அப்ப அந்த பறவையின் உணவே இரத்தம்தானா என்ற கேள்வி எழும். அப்படியில்லை… மற்ற பறவைகள் எவ்வாறு விதைகள், தேன், பூச்சிகள் போன்றவற்றைச் சாப்பிடுகின்றனவோ அதேபோல ஃபின்ச் பறவையும் அவற்றை சாப்பிடும் ஆனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் பறவையின் போக்கு மாறிவிடும். உடனே ரத்தத்தைக் குடிக்கத் தொடங்கும். ஃபின்ச் ஒரு கூட்டமாகச் சென்று கடற்பறவைகளைப் பின்னாலிருந்து தாக்கும். கடற்பறவையின் சிறகின் அடியில் கொத்தி ரத்தத்தை உறிஞ்சும். ஃபின்ச் பறவைகளுக்கு ரத்தத்தில் இருக்கும் இரும்புச் சத்து, உப்புச் சத்தை செரிமானம் செய்யும் ஆற்றல் உண்டு. செரிமானத்துக்கு உதவும் Peptostreptococcaceae என்ற நுண்ணுயிர் ஃபின்ச் பறவைகளின் வயிற்றில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.