ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்: வைரலாகும் புகைப்படம் 

 

ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்: வைரலாகும் புகைப்படம் 

சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது மகன் வேத் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

சென்னை: சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது மகன் வேத் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும் தொழில் அதிபரும், நடிகருமான விசாகனுக்கும் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்குப் பிறகு, பொன்னியின் செல்வன் வெப்சீரிஸில்  தீவிரமாக பணியாற்றி வரும் இவர் அடிக்கடி தனது மகன் வேத் பற்றியும் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில் ரஜினிகாந்த் பேட்ட படத்தில் ஸ்டைலோக கொடுத்திருக்கும் போஸ் போல வேத் கிருஷ்ணாவும், அதே போல் நின்று பயங்கரமாக போஸ் கொடுத்துள்ளார். இது குறித்து சௌந்தர்யா தனது பதிவில்,’தாத்தா போலேவே பேரன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

முன்னதாக இதே போன்று தேவ் கால்மேல் கால் போட்டு, காரில் அமர்ந்ததிருப்பதை, ‘ஸ்டைல் அவர் ரத்தத்தில் உள்ளது’ என்று சௌந்தர்யா குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.