ரஜினி வீட்ல தடபுடால் ‘தல’ தீபாவளி! தமிழ்திரையுலகின் தலைதீபாவளி ஜோடிகள்!

 

ரஜினி வீட்ல தடபுடால் ‘தல’ தீபாவளி! தமிழ்திரையுலகின் தலைதீபாவளி ஜோடிகள்!

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை களை கட்டத் துவங்கிவிட்டது. நாளை முதல் சென்னை நகர் முழுக்க வெறிச்சோடி காலியா இருக்கிற பறவைகளோட கூடு மாதிரி இன்னும் ரெண்டு, மூணு நாளைக்கு இருக்கும். கூடுவாஞ்சேரியைத் தாண்டுறதுக்கே அரை நாள் ஆனாலும், தீபாவளிக்கு ஊருக்குப் போற சந்தோஷமே தனி தான்!

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை களை கட்டத் துவங்கிவிட்டது. நாளை முதல் சென்னை நகர் முழுக்க வெறிச்சோடி காலியா இருக்கிற பறவைகளோட கூடு மாதிரி இன்னும் ரெண்டு, மூணு நாளைக்கு இருக்கும். கூடுவாஞ்சேரியைத் தாண்டுறதுக்கே அரை நாள் ஆனாலும், தீபாவளிக்கு ஊருக்குப் போற சந்தோஷமே தனி தான்!

soundarya rajinikanth

இந்த தீபாவளி திரையுலகில் சிலருக்கு தலை தீபாவளியா இருக்கு. முக்கியமா ரஜினி வீட்ல இந்த வருஷம் தடபுடலா தல தீபாவளி களை கட்ட துவங்கிடுச்சு. நம்மளோட நெருங்கிய நட்பு வட்டத்துல விசாரிச்சதுல, ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவின் விவாகரத்துக்குப் பின்னாடி, இரண்டாவது கணவரோட கொண்டாடுகிற தல தீபாவளி இது என்பதால், எந்த இடத்துலேயும் தன்னோட கெத்து இறங்கிடக் கூடாதுன்னு ரஜினி முன்னாடியே சொல்லிட்டாராம். காசு கொடுத்தால் ஆயிரம் கடைகளில் இருந்து தீபாவளி பலகாரங்கள் வந்திறங்கும். ஆனா, எந்த பலகாரத்தையும் கடையில வாங்கக் கூடாது என்று ஆர்டர் போட்டு, கடந்த ஒரு மாத காலமாகவே செளந்தர்யாவின் தலை தீபாவளிக்காக மெனு செலக்ட் பண்ணி பர்சேஸ் பண்ணச் சொல்லியிருக்கார் ரஜினி. ஸோ… இந்த வருஷ தல தீபாவளிக்கு ரஜினி வீட்ல தான் பெரிய கொண்டாட்டம். 
க்ரீன் தீபாவளி, க்ளீன் தீபாவளி எல்லாம் கிடையாது. பட்டாசுகள் எல்லாம் லோடு கணக்குல ஏற்கெனவே வந்து இறங்கியாச்சு என்று நெருடலாய் காதைக் கடிக்கிறார்கள். 
அடுத்த பெரிய எதிர்பார்ப்பு ஜோடி…. நம்ம இயக்குநர் ஏ.எல். விஜய் ஜோடி. நடிகை அமலாபால் விவாகரத்துக்கப்புறமா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இயக்குநர் ஏ.எல்.விஜய் இந்த வருஷம் தல தீபாவளியைக் கொண்டாடுகிறார். இந்த வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டிருக்கு என்று சந்தோஷமாக தல தீபாவளியை எதிர்பார்த்திருக்கு ஜோடி!

suja

இதுக்கப்புறமா பெரிய வீட்டு தல தீபாவளின்னா, நடிகர் திலகம் சிவாஜி வீட்லேயும் தல தீபாவளி தான்.  நடிகை சுஜா வருணியும், நடிகர் ராம்குமார் மகனும், சிவாஜியின் பேரனுமான சிவக்குமாரும் இந்த வருஷம் தல தீபாவளியைக் கொண்டாடுறாங்க. இந்த ஜோடி தங்களது செல்ல குழந்தையுடன் தல தீபாவளியை கொண்டாட போறாங்க. 
இன்னொரு ஜோடியையும் இந்த லிஸ்ட்ல சேர்க்கலாம். ஆனா யார்னு படிச்சுட்டு, யாருமே திட்டக் கூடாது. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவோட தம்பி இசையமைப்பாளர் குறளரசன், நபீலா ஆர் அகமதும் இந்த வருஷம் தல தீபாவளியைக் கொண்டாடுறாங்க. ஆனா, கல்யாணத்துக்காக முஸ்லீமாக மதம் மாறிட்டார்னு சொல்றாங்க. அதனால குறளரசனுக்கு தல தீபாவளியா, தல பக்ரீத் பண்டிகையான்னு தெரியலை. என்னவாயிருந்தா என்ன… வாழ்த்தைச் சொல்லி வையுங்க… 
அதன் பிறகு கலைவாணர் குடும்ப வாரிசான பாடகி என். எஸ். கே ரம்யா சமீபத்தில் சீரியல் நடிகர் சத்யாவை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடியும் இந்த வருஷம் தல தீபாவளியைக் கொண்டாடறாங்க.

arya

என்ன லிஸ்ட் முழுக்க படிச்சுட்டீங்களா… இது இன்னொரு வில்லங்கமான ஜோடி மிஸ் ஆகுது. அது நம்ம நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா. இவங்களுக்கும் இந்த வருஷம் தல தீபாவளி தான். ஆனா இவங்க தீபாவளியைக் கொண்டாடுவாங்களான்னு தெரியலை. இருவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவங்களுக்கும் தல தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லி வைப்போம்!