ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளிய விஜய் சேதுபதி : எப்படி தெரியுமா?

 

ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளிய விஜய் சேதுபதி : எப்படி தெரியுமா?

2018-ம் ஆண்டு அதிக படங்களில் நடித்த ஹீரோக்களின் பட்டியலில்  நடிகர் விஜய் சேதுபதி முதலிடம் பிடித்துள்ளார்

சென்னை: 2018-ம் ஆண்டு அதிக படங்களில் நடித்த ஹீரோக்களின் பட்டியலில்  நடிகர் விஜய் சேதுபதி முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகும். முன்னணி நடிகர்கள் மற்றும் அறிமுக நடிகர்கள் என பலரது திரைப்படங்கள்  ஆண்டுதோறும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. ஆனால்  பெரியஹீரோக்களின் திரைப்படங்கள் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு மட்டுமே வெளியாகும்.

vj

இந்நிலையில் தமிழ் திரையுலகில் தற்போது பிஸியான நடிகர் யார்  விஜய் சேதுபதி மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 5 படங்களிலாவது நடித்து வருகிறார். கடந்த ஆண்டு  இவர் நடிப்பில் வெளியான கவன், விக்ரம் வேதா, கருப்பன் ஆகிய படங்கள் வெளியாகின.

vj

அதே போல் இந்த வருடமும் அவர் 7 படங்களில் நடித்துள்ளார். பிரேம் குமார் இயத்தில் ‘96’, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘சீதக்காதி’, மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’, கோகுல் இயக்கத்தில் ‘ஜுங்கா’, விக்கி இயக்கத்தில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோல், ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்கள் இந்தாண்டில் வெளியாகியுள்ளது. இதில் 96, செக்க சிவந்த வானம், இமைக்கா நொடிகள் படங்கள் நல்ல வசூலை தந்தது. மற்ற படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைத் தரவில்லை. 

vijayrajini

இவருக்கு அடுத்தபடியாக பிரபுதேவா, கவுதம் கார்த்திக், விக்ரம் பிரபு ஆகியோர் 3 படங்களிலும், ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம் ரவி ஆகியோர் 2 படங்களிலும் நடித்துள்ளனர்.  கமல் ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி, ஜீவா, ஆர்யா ஆகியோரின் தலா ஒரு படமும் வெளியாகியுள்ளது.