ரஜினி வந்தாலும் எப்போதும் தல அஜித் தான்: பிரபல திரையரங்கு அதிரடி!

 

ரஜினி வந்தாலும் எப்போதும் தல அஜித் தான்: பிரபல திரையரங்கு அதிரடி!

விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியானால் எந்த படத்தை மெயின் ஸ்கீரினில் வெளியிடுவீர்கள் என்ற கேள்வி தியேட்டர் நிர்வாகம் ஒன்று அதிரடியாகப் பதிலளித்துள்ளது.

சென்னை: விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியானால் எந்த படத்தை மெயின் ஸ்கீரினில் வெளியிடுவீர்கள் என்ற கேள்வி தியேட்டர் நிர்வாகம் ஒன்று அதிரடியாகப் பதிலளித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படமும், தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ளது. இதனால் இரு படங்களுக்கும் வசூல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது. இருப்பினும் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

 

இந்நிலையில் அம்பத்தூர் ராக்கி தியேட்டர் நிர்வாகத்திடம்,  பேட்ட படமும், விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியானால் எந்தப் படத்தை மெயின் ஸ்கீரினில் வெளியிடுவீர்கள் என டிவிட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள தியேட்டர் நிர்வாகம், ‘கண்டிப்பாகத் தல படம் தான்’ என்று பதிவிட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

பேட்ட மற்றும் விஸ்வாசம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில்  ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் விருந்தாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.