“ரஜினி மற்றவர்களைப் பார்த்து மலிவான அரசியலைச் செய்யாமல் இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது” : பாஜக தாக்கு!

 

“ரஜினி மற்றவர்களைப் பார்த்து மலிவான அரசியலைச் செய்யாமல் இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது” : பாஜக தாக்கு!

மத்திய அரசுக்கு எதிரான ரஜினியின் இந்த பேச்சுக்கு கமல்ஹாசன், திருமாவளவன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது.  இதில் 30 பேர் பலியாகியுள்ளனர். 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் மத்திய அரசின்  உளவுத்துறையின் தோல்வி. இதற்கு மத்திய அரசைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். டிரம்ப் இந்தியா வருகையின் போது  மத்திய  அரசு ஒழுங்காகக் கவனமாகச் செயல்படவில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.  உளவுத்துறை தோல்வியென்றால் அது உள்துறை அமைச்சகத்தின் தோல்வின் என்று தான் அர்த்தம். மதத்தை வைத்து அரசியல் செய்வது தவறு. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மதத்தை வைத்து அரசியல் செய்வதை ஒடுக்க வேண்டும். 

ஊடகங்கள் ஒற்றுமையாக இருந்து எது நியாயம் என்பதை மக்களுக்குக் காட்ட  வேண்டும்.  மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் என்னை பாஜகவின் ஆள் , பாஜகவுக்கு துணை போவதாகச் சொல்வது வேதனையளிக்கிறது. நான் பாஜக ஆதரவாளர் அல்ல. சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல் ஆளாக நிற்பேன் என்றுதான் கூறினேன். உண்மையைச் சொன்னால் பாஜகவின் ஊதுகுழல் என்கிறார்கள். டெல்லி வன்முறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள், இல்லையென்றால் ராஜினாமா செய்யுங்கள்.  வன்முறைச் சம்பவங்களை மத்திய, மாநில அரசுகள் தொடக்கத்திலேயே களைய வேண்டும்’ என்றார். மத்திய அரசுக்கு எதிரான ரஜினியின் இந்த பேச்சுக்கு  கமல்ஹாசன்,  திருமாவளவன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்தனர்.

ttn

இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்,  டெல்லி வன்முறை உளவுத்துறை தோல்வி என கூறுவதும் மத்திய அரசை கண்டித்திருப்பதும் ரஜினிகாந்த்தின் அறியாமை காட்டுகிறது.ரஜினி மற்றவர்களைப் பார்த்து மலிவான அரசியலைச் செய்யாமல் இருப்பது அவரின் எதிர்காலத்திற்கு நல்லது’ என்று கூறியுள்ளார்.