ரஜினி மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் – அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் – அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினிகாந்த் மட்டுமில்லை யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் காட்சி அறிவிக்கலாம் இதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாது என்றும்,  ஜனநாயகத்தில் சுதந்திரமாக எதுவேண்டுமானாலும் செய்வதற்கு உரிமை உள்ளது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்  பகிர்மான கழகம் சார்பில் 44வது அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையிலான கூடைப்பந்து மற்றும் பிரிட்ஜ் போட்டிகள் -2020 போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது  இவ்விழாவில் மின்வாரிய துறை அமைச்சர் பி. தங்கமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.

Jayakumar

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “மின் ஊழியர்கள் அனைவரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் மக்களுக்கு நேரடியாக சேவைசெய்யக்கூடிய துறையாக இருப்பதால் இந்த துறை மேல் காதல். இந்நிகழ்ச்சி எனக்கு ஒரு குடும்பவிழா, உலகதரம் வாய்ந்த தரத்தில் உள்ளது நேரு உள்விளையாட்டு அரங்கம். அதற்கு வித்திட்டவர் புரட்சித்தலைவி அம்மா தான். சாதி, மதம், கடந்த ஒரு துறை என்றால் அது விளையாட்டு துறைதான். கடின பயிற்சி பெற்றால் சுலபமாக வெற்றி பெறலாம் , முயற்சியும், பயிற்சியும் மிகவும் மிக்கியம்.

புதிதாக நியமிக்கபட்டுள்ள பாஜக தலைவருக்கு மாண்புமிகு முதல்வர் மற்றும் எங்களுடைய வாழ்த்துக்கள் நிச்சயம் அவருக்கு உண்டு, பஞ்சமி நிலத்தை சுட்டிக் காட்டியவர் என்பதற்காக மட்டுமல்ல தவறு எங்கு இருந்தாலும் யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். முரசொலி சொத்து பஞ்சமி நிலம் எனும்போது அதை மெய்ப்பிக்க வேண்டிய சுமை திமுகவுக்கு உள்ளது. அது பஞ்சமி நிலம் இல்லை என்பதை திமுக தான் நிரூபிக்க வேண்டும். ரஜினிகாந்த் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், கட்சி அறிவிக்கலாம். இதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாது. ஜனநாயகத்தில் சுதந்திரமாக எதுவேண்டுமானாலும் செய்வதற்கு உரிமை உள்ளது ” எனக்கூறினர்.