ரஜினி மக்கள் மன்றம், அதிமுக, அமமுக வரிசையில் பாமகவினர் பலர் திமுகவில் இணைந்தனர்

 

ரஜினி மக்கள் மன்றம், அதிமுக, அமமுக வரிசையில் பாமகவினர் பலர் திமுகவில் இணைந்தனர்

ஓமலூர் தொகுதி முன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு, சேலம் மாவட்ட பாமக செயலாளர் ஜெயவேல் உள்பட நூற்றுக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர்

ஓமலூர் தொகுதி முன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு, சேலம் மாவட்ட பாமக செயலாளர் ஜெயவேல் உள்பட நூற்றுக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் தனது பிரச்சாரத்தை துவங்கி பல்வேறு இடங்களில் தீவிரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

admk

இந்தமுறை திமுக தரப்புக்கு ஆதரவு பெருகி வருகிறது, அமமுக-வில் இருந்து சிலர் திமுகவில் இணைந்தனர், அதிமுக ராஜ கண்ணப்பன் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அதிமுக

அதேபோல் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் பலர் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 100-க்கும் அதிகமான பாமகவினர் திமுகவில் இணைந்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓமலூர் தொகுதி முன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு, சேலம் மாவட்ட பாமக செயலாளர் ஜெயவேல் உள்பட நூற்றுக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர். இப்படி பல்வேறு கட்சிகளில் இருப்பவர்கள் திமுக பக்கம் சாய்வது அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.