ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி அதிரடி நீக்கம்? பரபரக்கும் பின்னணி தகவல்கள்!

 

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி அதிரடி நீக்கம்? பரபரக்கும் பின்னணி தகவல்கள்!

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளராக இருந்த இளவரசன், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளராக இருந்த இளவரசன், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்தது முதல், அவரது மக்கள் மன்றத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகிகள், ஒரு கோடி உறுப்பினர்களை மன்றத்தில் இணைத்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

rajini

இது தொடர்பாக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை ரஜினியே நேரில் வழங்கியுள்ளதால், அவர்கள் மிக உற்சாகமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, ஒவ்வொரு ஊரிலும் 15 பேர் கொண்ட பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. கிட்டத்தட்ட கட்சி தொடங்குவதற்கான 90 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் இரண்டு படங்களில் சூப்பர்ஸ்டர் கமிட்டாகியுள்ளார். இருப்பினும், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் இருப்பதால், ரஜினி நிச்சயம் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளராகவும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராகவும் இருந்த டாக்டர்.இளவரசன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

rajini

ஏற்கனவே, கடலூர் மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து இளவரசன் நீக்கப்பட்டிருந்த நிலையில், மாநில பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.