ரஜினி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார் 

 

ரஜினி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார் 

சென்னை ராயபுரத்தில் மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி வழங்கிய பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை ராயபுரத்தில் மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி வழங்கிய பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி  நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

Jayakumar

அப்போது பேசிய அவர், “பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதற்கு தக்க நேரம் எதிர்பார்த்து இருப்பதாகஅமைச்சர் பாஸ்கர் தெரிவித்துள்ளது  அவருடைய கருத்தாக இருக்கலாம் கட்சியின் கருத்து இல்லை. நடைபெறாத ஒரு விஷயத்தை கூறி ரஜினி ஏன் மக்களை திசை திருப்ப வேண்டும் என தெரியவில்லை.  அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவருக்கு எந்த இழுக்கு ஏற்பட்டாலும் அதனை நாங்கள் கண்டித்து குரல் கொடுப்போம். ரஜினியை கண்டு 
திமுக வேண்டுமானால் பயப்படலாம், அதிமுகவினர் யாருக்கும் பயப்படவில்லை. இது பல முரண்களை தாண்டி உருவான இயக்கம் ரஜினி பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ரஜினி விவகாரம் நீதிமன்றம் சென்றுள்ளது” என்று கூறினார். 

பெரியாரின் புகழை கோபுரத்தின் உச்சியில் வைக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறியுள்ள கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்பது தான் அதிமுகவின் கொள்கை என்று தெரிவித்தார்.