ரஜினி -பெரியார் சர்ச்சைக்கு இணையத்தில் ஓய்வு கொடுத்த சூர்யா ரசிகர்கள்!

 

ரஜினி -பெரியார் சர்ச்சைக்கு இணையத்தில் ஓய்வு கொடுத்த சூர்யா ரசிகர்கள்!

 இதற்கான அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் டிவிட்டரை ஆக்கிரமித்தது #MaaraTheme என்ற ஹேஷ்டாக்.

என்.ஜி.கே, காப்பான் படங்களை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துவருகிறார்.

ttn

சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர்  ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. 

 

ரஜினி -பெரியார் சர்ச்சைக்கு இணையத்தில் ஓய்வு கொடுத்த சூர்யா ரசிகர்கள்!

இப்படத்தின்  போஸ்டர்கள் மற்றும்  டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றது. இதையடுத்து இப்படத்தின்  மாறா என்ற தீம் பாடல் இன்று  மாலை 4 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்த பாடலை சூர்யா பாடியுள்ளார்.  இதற்கான அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் டிவிட்டரை ஆக்கிரமித்தது #MaaraTheme என்ற ஹேஷ்டாக்.

ttn

சமீபத்தில் துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழாவில் ரஜினி – பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.  தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்பும், பாஜக ஆதரவாளர்களின் ஆதரவும் ரஜினிக்கு கிடைத்தது. இதனால் இணையத்தில் ரஜினி -பெரியார் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு  வந்தது.இருப்பினும் சூர்யாவின் சூரரைப் போற்று அப்டேட் வந்ததும் ரஜினி -பெரியார் விவகாரம் பின்னுக்கு தள்ளப்பட்டது. இதன் மூலம் சூர்யா ரசிகர்கள் இந்த விவகாரத்திற்கு  சற்று ஓய்வு  கொடுத்துள்ளனர்.