ரஜினி பாஜகவில் மட்டுமல்ல எந்தவொரு கட்சியிலும் சேரமாட்டார்… அவர் வழி தனி வழி!! – திருநாவுக்கரசர்

 

ரஜினி பாஜகவில் மட்டுமல்ல எந்தவொரு கட்சியிலும் சேரமாட்டார்… அவர் வழி தனி வழி!! – திருநாவுக்கரசர்

ரஜினிகாந்த் பாஜக மட்டுமல்லாமல் எந்தவொரு கட்சியிலும் சேர மாட்டார். எந்த ஒரு தலைவருக்கு கீழ் இருந்தும் அவரால் வேலை பார்க்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த் பாஜக மட்டுமல்லாமல் எந்தவொரு கட்சியிலும் சேர மாட்டார். எந்த ஒரு தலைவருக்கு கீழ் இருந்தும் அவரால் வேலை பார்க்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,  “சந்திராயன்-2 பொருத்தவரையில் விக்ரம் லேண்டர்  இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொலைத்தொடர்பு இல்லாமல் இருக்கிறது. அதற்கான முயற்சிகளை இஸ்ரோ ஆய்வாளர்கள் எடுத்து வருகிறார்கள். இஸ்ரோவின் தலைவர் மற்றும் அந்த குழுவினருக்கு இது தோல்வியில்லை. 

thirunavukarasar
ப. சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டதிலிருந்து பல்வேறு கட்டங்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  100 நாள் மோடியின் ஆட்சி படுதோல்வி கண்டுள்ளது. முதல் ஐந்து ஆண்டும் தோல்விதான். சென்ற ஆட்சியிலும் ஏமாற்றம் இந்த ஆண்டும் ஏமாற்றம்தான்.  பொருளாதார நெருக்கடி, நிதி நெருக்கடி,  பணப்புழக்கம் கிடையாது, தொழில்கள் மூடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு கிடைக்காதது மட்டுமல்லாமல் வேலையில் இருப்பவர்களும் வேலையை இழக்க நேரிடும். மோடி வெளிநாட்டில் மட்டுமே இருக்கிறார். அந்த பழக்க தோஷத்தால் தான் என்னமோ நம் மந்திரிகளும் வெளிநாட்டிற்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரஜினிகாந்த் பாஜக மட்டுமல்லாமல் எந்தவொரு கட்சியிலும் சேர மாட்டார். எந்த ஒரு தலைவருக்கு கீழ்  இருந்தும் அவரால் வேலை பார்க்க முடியாது” என்று கூறினார்.