ரஜினி பட வசூல் சாதனையை முறியடித்த சாஹோ!

 

ரஜினி பட வசூல் சாதனையை முறியடித்த சாஹோ!

சாஹோ படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: சாஹோ படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என  3 மொழிகளில் உருவாகிவரும் இந்த படத்தின் ரூ.250 கோடிக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் கடந்த வாரம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

இந்த நிலையில் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும், இந்தியா முழுவதும் இந்த படம் ரூ.24 கோடி வசூலித்துள்ளது. இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட தென்னிந்தியப் படங்களைப் பொறுத்தவரை, பாகுபலி 2வது பாகம் தான் அதிக வசூல் செய்த முதல் படம். அதற்கு அடுத்து ரஜினியின் 2.0 படம் தான் இருந்தது. 

தற்போது ரஜினியின் 2.0 படத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை சாஹோ திரைப்படம்  பிடித்துள்ளது. இதன் மூலம் முதல் இரண்டு இடங்களில் பிரபாஸ் படங்கள் தான் இருக்கின்றன.