ரஜினி நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் : கி.வீரமணி ஆவேச பேச்சு !

 

ரஜினி நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் : கி.வீரமணி ஆவேச பேச்சு !

சில நாட்களுக்கு முன்னர்  துக்ளக் இதழின் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் தலைமையில் ராமர், சீதையின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது என்று கூறினார்.

சில நாட்களுக்கு முன்னர்  துக்ளக் இதழின் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் தலைமையில் ராமர், சீதையின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது என்று கூறினார். இதற்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ttn

அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நான் தவறான விஷயம் ஏதும் சொல்லவில்லை. .1971-ல் பெரியார் நடத்திய பேரணி குறித்து நான் தவறாகச் சொல்லவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

ttn

இது குறித்துப் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ” ரஜினி கூறியதை மாற்றிக் கொள்ளும் நிலையில் உள்ளார். பெரியார் பற்றி உண்மைக்கு மாறான கருத்துக்களைக் கூறியிருக்கக் கூடாது. அனைத்தையும் கூறி விட்டு, மன்னிப்பும் கேட்க முடியாது என்று சொல்கிறார். மன்னிப்பு கேட்பது பெருந்தன்மை. அது தான் மனித பண்பாடு. பெரியாரைப் பற்றி தவறான தகவலைப் பரப்பி பிரச்சனை ஏற்படுத்துவதற்கு இவருக்கு எந்த உரிமையும் கிடையாது. ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும். அப்போது உரிய ஆதாரங்களுடன் பதில் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.