ரஜினி – நிர்மலா இடையேயான உறவு!! முதல் காதலியை தேடும் சூப்பர் ஸ்டார் 

 

ரஜினி – நிர்மலா இடையேயான உறவு!! முதல் காதலியை தேடும் சூப்பர் ஸ்டார் 

நின்றால் ஸ்டைல், நடந்தால் ஸ்டைல், பேசினால் ஸ்டைல். பார்த்தால் ஸ்டைல்  என சொல்லவைக்கும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவருக்கும் ஒரு காதல் தோல்வி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

நின்றால் ஸ்டைல், நடந்தால் ஸ்டைல், பேசினால் ஸ்டைல். பார்த்தால் ஸ்டைல்  என சொல்லவைக்கும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவருக்கும் ஒரு காதல் தோல்வி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

சினிமா, அறிமுகம், கைநிறைய சம்பளம், பேர், புகழ் என நாளொரு கால்ஷீட்டும் பொழுதொரு சம்பள உயர்வு இதெல்லாம் வராமல் இருக்கும்போதே ரஜினியை நேசித்தவர் நிர்மலா. ரஜினிகாந்த் பெங்களூரில் கண்டக்டராக வேலை செய்துவந்தபோது, எம்.பி.பி.எஸ் படித்துக்கொண்டிருந்தார் நிர்மலா. பேருந்தில் பயணம் செய்யும்போது தான் ரஜினி- நிர்மலா நட்பு உதயமானது. அதன்பின் அது காதலாக மலர்ந்தது.

rajinikanth

ரஜினிக்கு சினிமா மீதும், நாடகத்தின் மீதும் இருந்த அலாதி பிரியத்தை பார்த்த நிர்மலா, ரஜினியை சென்னை சென்று அங்கிருக்கும் திரைப்படக் கல்லூரியில் சேரும்படி வலியுறுத்தினார். ஆனால் ரஜினியோ நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். ஆதலால் அவரிடம் சென்னை சென்று வாய்ப்பு தேடுவதற்கு பணம் இல்லை.  இதையறிந்த நிர்மலா தன்னிடமிருந்த 500 ரூபாயை கொடுத்து, உன்னால் முடியும். நீ ஜெயிச்சிட்டு வா என ரஜினிக்கு ஊக்கம் கொடுத்து சென்னைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

rajinikanth

சினிமா மீதிருந்த காதலாலும், நிர்மலா மீதிருந்த பாசத்தாலும் அவர் சொல்கேட்டு சென்னை வந்தார் ரஜினிகாந்த்.  1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் சினிமாவில் நுழைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி கண்ட பிறகு நிர்மலாவை தேடி பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் நிர்மலாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், அவர்கள் சொந்த ஊருக்கே சென்றுவிட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர். 

இதையறிந்து மனமுடைந்த ரஜினிகாந்த், பல நாட்கள் நிர்மலாவை எண்ணி கண்ணீர் சிந்தியிருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.