ரஜினி சொன்ன அதே 11ல்… ரசிகர்கள் அதிரடி!

 

ரஜினி சொன்ன அதே 11ல்… ரசிகர்கள் அதிரடி!

மேலும் மேலும் என்னை வேதனைக்கு உள்ளாக்காதீர்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துவிட்டார். ஆனால், எங்களின் வேதனையை கேளுங்கள் என்று சொல்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி சொன்ன அதே 11ல்… ரசிகர்கள் அதிரடி!

29.12.2020 அன்று காலை 11.00 மணிக்கும், 11.1.2021 அன்று காலை 11 மணிக்கும் டுவிட்டர் வாயிலாக ரஜினிகாந்த் இரண்டு அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து எந்த ஒரு தவறான கருத்துகளும், செயல்பாடுகளும் செய்யாமல் மிக அமைதியாக அன்பான முறையில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இன்று 12.1.2021 காலை 11 மணிக்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்துகிறார்கள்.

ரஜினி ‘ஆன்மீக அரசியல்’ என்று சொன்னது மாதிரி, அவரது ரசிகர்கள் ‘அமைதியான ஆதங்கம்’என்கிறார்கள்.

ரஜினி சொன்ன அதே 11ல்… ரசிகர்கள் அதிரடி!

ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவிட்டுள்ள இரண்டு நேரமும் 11. அதாவது கூட்டுத்தொகை 2. அதே மாதிரி தேதி என்று பார்த்துக்கொண்டால் 11ம் தேதி.. கூட்டுத்தொகை 2 வருகிறது. 29ம் தேதியும்… கூட்டுத்தொகை 2 வருகிறது. அந்த 2ல் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

ரஜினிகாந்த் இரண்டு அறிக்கைகளையும் வெளியிட்ட அதே 11 மணிக்கு அவரது ரசிகர்களும் அதுகுறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.