ரஜினி செஞ்சது கடமை; விஜய்யிடமும் எதிர்பார்ப்பது நியாயமா? கலைஞானம் குற்றச்சாட்டுக்கு எகிறும் விஜய் ஆதரவாளர்கள்!

 

ரஜினி செஞ்சது கடமை; விஜய்யிடமும் எதிர்பார்ப்பது நியாயமா? கலைஞானம் குற்றச்சாட்டுக்கு எகிறும் விஜய் ஆதரவாளர்கள்!

எனக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார்  என்று கூறியுள்ளார் கலைஞானம். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விஜய் படங்கள் தோல்வியடைந்த ஆரம்ப காலத்தில் விஜய்யின் அப்பா சந்திரசேகர் கேட்டு கொண்டதால் அவரின் மூன்றாவது படத்திற்கு தயாரிப்பாளரை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் கலைஞானம் .ஆனால்  விஜய் படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆன பிறகு,  சென்னையில் பல வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டிருந்தார். அப்போது எனக்கு ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் என எஸ்.ஏ.சந்திரசேகரை கலைஞானம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆனால் நான் கேட்காமலேயே ரஜினி எனக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார்  என்று கூறியுள்ளார் கலைஞானம். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

உண்மையில் விஜய் சென்னை சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமான அப்பார்ட்மென்டில் தன்னிடம் வேலை செய்பவர்கள் இலவசமாகத்  தங்கிக்கொள்ள இடம் அளித்துள்ளார். பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்திலும் சரி, தான் ஆரம்பத்தில் ஹீரோவான போது இருந்த மேக் அப் மேன்கள், டிரைவர் உள்ளிட்ட பணியாட்களையும்  சரி, இவர்களில் ஒருவரை கூட விஜய் வேலையிலிருந்து அனுப்பவில்லையாம். தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்குப் பார்த்து பார்த்து அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கும் விஜய் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டைக் கலைஞானம் முன்வைத்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

இதை கேள்விப்பட்ட விஜய்க்கு நெருக்கமானவர்கள், ரஜினி வீடு வாங்கி கொடுக்கிறார் என்றால் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது கலைஞானம் தான். அதுவும் அவராக வீடு வாங்கி தரவில்லை. கலைஞானம் கஷ்டப்படுவதைச் சிலர் சொல்லி கேள்விப்பட்டுத் தான் அவர் அதை செய்திருக்கிறார். ஆனால்  விஜயும் தனக்கு அதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்? என்று சாடி வருகிறார்கள்.