ரஜினி கட்சி தொடங்கட்டும் யோசிக்கலாம்… கூட்டணிக்கு அடிபோட்டு வைக்கிறாரா ராமதாஸ்?

 

ரஜினி கட்சி தொடங்கட்டும் யோசிக்கலாம்… கூட்டணிக்கு அடிபோட்டு வைக்கிறாரா ராமதாஸ்?

ரஜினியுடன் பா.ம.க கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக தமிழருவி மணியன் கூறியதற்கு டாக்டர் ராமதாஸ் மறுப்பு தெரிவிக்காதது அக்கட்சித் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ரஜினியுடன் பா.ம.க கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக தமிழருவி மணியன் கூறியதற்கு டாக்டர் ராமதாஸ் மறுப்பு தெரிவிக்காதது அக்கட்சித் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ramad

ரஜினிக்கும் டாக்டர் ராமதாஸின் பா.ம.க-வுக்கும் ஒத்துவராது. பாபா படம் வெளியான காலத்திலிருந்தே இருவரும் மோதி வருகின்றனர். இதனால், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு ஆதரவாக இருந்த ரஜினிகாந்த் பா.ம.க-வுக்கு எதிராக தன்னுடைய கருத்தைப் பதிவு செய்தார். அதன்பிறகு பா.ஜ.க-கூட்டணிக்கு ராமதாஸ் வந்தநிலையில் இருவரும் பெரிய அளவில் எதிரெதிர் கருத்துக்களைக் கூறிக்கொள்வது இல்லை.

maniyan

சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழருவி மணியன், ரஜினியுடன் பா.ம.க கூட்டணி சேரலாம் என்று தெரிவித்திருந்தார். இது குறித்து இன்று டாக்டர் ராமதாசிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ரஜினி முதலில் கட்சி துவங்கட்டும். பின்னர் கூட்டணி பற்றி யோசிக்கலாம். தமிழருவி மணியனின் பேட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை” என்றார்.
கூட்டணிக்கு டாக்டர் ராமதாஸ் மறுப்பு தெரிவிக்காமல், கட்சி ஆரம்பித்த பிறகு யோசிக்கலாம் என்று கூறியிருப்பதன் மூலம் ரகசியப் பேச்சு உண்மைதானோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.