ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது! பெட்டிக்கடைக்காரரின் அட்ராசிட்டி

 

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது! பெட்டிக்கடைக்காரரின் அட்ராசிட்டி

ரஜினி கட்சி துவங்கும் வரை யாருக்கும் கடன் கிடையாது என்று ஒரு பெட்டிக்கடைக்காரர் போர்டு வைத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

ரஜினியின் அரசியல் வருகை என்பது எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது. சினிமா துறையில் கோலோச்சி நிற்க தொடங்கிய காலத்தில் இருந்தே திரையில் அரசியல் பேச தொடங்கிய அவர் பின் அதனையே தனது பாணியாக மாற்றினார்.​ என்ன தான் திரையில் அரசியல் பேசினாலும் தம்முடைய வருகையை திரைக்கு வெளியில் என்றைக்குமே அவர் உறுதி செய்ததே இல்லை. எப்ப வருவேன் எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன் என்ற அவருடைய பன்ச் வசனமும் அரசியலாகத்தான் பார்க்கப்பட்டது.

rajinikanth

இந்நிலையில் தமிழகத்தின் மாபெரும் அரசியல் ஆளுமைகளாக இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் தமிழக்தில் வெற்றிடம் நிலவுவதாக பல்வேறு அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சிஸ்டம் சரியில்லை என்ற விமர்சனத்துடன், தாம் தனி கட்சி ஆரம்பிக்க போவதாக ரஜினிகாந்த் அறிவித்து, தனது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தினார்.

ரஜினியின் இந்த முடிவுக்கு பின் பாஜக இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களும் எழுந்தன. மேலும் பல தரப்பட்ட மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்திய மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளுக்கு அவர் ஆதரவு தெரிவித்தது மேலும் அதை உறுதிப்படுத்தியது.  சில நேரங்களில் தம்முடைய ஒவ்வொரு படத்தின் வெளியீடுக்கும் விளம்பரம் தேடுவது போல அந்நேரத்தில் அவருடைய கருத்துக்கள் சர்ச்சையாக்கப்பட்டன. இந்நிலையில் கட்சி தொடங்க போவதாக ரஜினி கூறி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதற்கான அறிவிப்புகள் வெளிவந்த பாடில்லை. வரும் ஆனா வராது என்பது போல அவர் அறிவிப்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில்,ரஜினிகாந்த் கட்சி துவங்கும் வரை யாருக்கும் கடன் கிடையாது என்று ஒரு பெட்டிக்கடைக்காரர் போர்டு வைத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.